என் அப்பாவுக்கு அந்த பிரச்சனை இருப்பது உண்மைதான்.. ஓஹ் அதனால தான் இப்படியெல்லாம் பேசுறாரா?

Yuvi
- Advertisement -

கடந்த இரண்டு நாட்களாகவே யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்களான தோனி மற்றும் கபில் தேவ் ஆகியோர் குறித்து பேசிய சர்ச்சையான கருத்துக்கள் தான் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. மேலும் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங்கை தாக்கி ரசிகர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த அளவிற்கு யோக்ராஜ் சிங்கின் கருத்துக்கள் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுதான் என் அப்பா இப்படி பேச காரணம் :

ஏனெனில் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் : தனது மகனின் கிரிக்கெட் கரியர் முடிவுக்கு வந்ததன் காரணமே முன்னாள் கேப்டன் தோனி தான் என்றும் தோனி மட்டும் யுவராஜ் சிங்கை நிராகரிக்கவில்லை என்றால் இன்னும் 4-5 ஆண்டுகள் கூடுதலாக யுவராஜ் சிங்கால் இந்திய அணிக்காக விளையாடி இருந்திருக்க முடியும் என்றும் பேசியிருந்தார்.

- Advertisement -

அதோடு தனிப்பட்ட முறையில் தனது மகனின் கேப்டன் பதவி பறிபோனதற்கு காரணமே தோனி தான் என்ற குற்றச்சாட்டையும் அவர் முன் வைத்திருந்தார். அதோடு 1981 ஆம் ஆண்டு இந்திய அணியிலிருந்து தன்னை எந்தவித காரணமும் இன்றி கபில் தேவ் நீக்கி விட்டதாகவும் அதன் காரணமாகவே கபில் தேவ் ஒரு உலகக் கோப்பை மட்டும் தான் வைத்திருப்பதாகவும் ஆனால் தன்மகன் யுவராஜ் சிங் 13 கோப்பைகளை வைத்திருப்பதாகவும் தாக்கி பேசியிருந்தார்.

அதுமட்டும் இன்றி தனக்கும் தன் மகனுக்கும் ஏற்பட்ட இழப்பிற்கு நாங்கள் பழிவாங்கி விட்டதாகவும் தெரிவித்திருந்தார். இப்படி இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் இருவரையும் விமர்சித்து யோக்ராஜ் சிங் பேசியிருந்தது சமூக வலைதளத்தில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படி தனது தந்தையின் மோசமான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஏற்கனவே கடந்த ஆண்டு யுவராஜ் சிங் பதிலளித்துள்ள ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் அந்த வீடியோவில் பேசியுள்ள யுவராஜ் சிங் : எனது தாய்க்கும் தந்தைக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாகவும், தானும் அதனால் தனித்து இருப்பதாக தெரிவித்திருந்தார். அதோடு எனது தந்தைக்கு மனநலம் சார்ந்த பிரச்சினைகள் இருப்பதாக தெரிகிறது. ஆனால் அதை எல்லாம் அவர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்.

இதையும் படிங்க : ரச்சின் ரவீந்திராவுக்காக சி.எஸ்.கே அணியின் நிர்வாகம் செய்துள்ள உதவி – இதனால் தான் சி.எஸ்.கேவை குடும்பம்னு சொல்றாங்க

அதன் காரணமாகவே அவர் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார். நான் அதுகுறித்து பேச முன்வரவில்லை. அந்த பிரச்சனையை அவர் ஏற்றுக்கொள்வதும் கிடையாது. ஆனால் அதனை அவர் உணர்ந்து பேச வேண்டும் என்று தனது தந்தைக்கு இருக்கும் மனநலப் பிரச்சனை குறித்து கடந்த ஆண்டே யுவராஜ் சிங் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement