மொதல்ல கோடி கோடியா தருவாங்க.நல்லா ஆடலனா கண்டுக்கக்கூட மாட்டாங்க – ஐ.பி.எல் குறித்து முன்னணி வீரர் பேட்டி

- Advertisement -

இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்தியா மட்டுமின்றி உலகஅளவிலும் ரசிகர்களின் பெரும் வரவேற்பினை பெற்ற இந்த தொடர் 13 ஆவது சீசனாக இந்த ஆண்டு நடைபெற இருந்தது. இந்நிலையில் இந்தியாவில் ஏற்பட்ட கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கு முன் மும்பையில் வீரர்களின் ஏலம் நடைபெற்றது.

Ipl cup

- Advertisement -

ஆண்டுதோறும் ஐபிஎல் தொடர் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் வீரர்கள் ஏலம் நடைபெறும்.
இதில் முக்கியமான நட்சத்திர வீரர்களை ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுக்க ஆசைப்படும். இப்படி ஒவ்வொரு அணியும் ஏலம் எடுப்பதால் அந்த வீரரின் விலை அதிகமாகும். இப்படியான ஒரு அதிக விலைக்கு தான் 2015 ஆம் ஆண்டு யுவராஜ்சிங் எடுக்கப்பட்டார்.

2015 ஆம் ஆண்டு அவரை 16 கோடிக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி 2ஏலத்தில் எடுத்தது. ஆனால் அந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் யுவராஜ் சிங்கிற்கு சிறப்பாக அமையவில்லை. 14 போட்டிகளில் ஆடி வெறும் 248 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதுகுறித்து தற்போது யுவராஜ் சிங் தற்போது கருத்து ஒன்றினை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது :

Yuvi

நாம் இவ்வளவு தொகைக்கு ஏலம் எடுக்கப்படும்போது நமக்கு நெருக்கடி அதிகமாகும். முக்கியமான விஷயம் என்னவென்றால் நாம் இவ்வளவு பெரிய தொகைக்கு எடுக்கப்பட்ட பின்னர் சரியாக விளையாடவில்லை என்றால் ஊடகங்கள் நம்மைப் பற்றி மோசமாக செய்திகளை வெளியிடும்.
இப்படியான செய்திகள் வெளியாகும் போது அது உங்களை பாதிக்கும்.

- Advertisement -

இதன் காரணமாக இளம் வீரர்களுக்கு நான் ஒரு அறிவுரை கூற விரும்புகிறேன். இளம் வீரர்கள் அனைவரும் டிவி பத்திரிக்கை மற்றும் சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் யுவராஜ். அப்படி விலகியிருந்தால் மட்டுமே உங்கள் மீதுள்ள அழுத்தத்தை உணராமல் உங்களால் சிறப்பாக செயல்படமுடியும்.பெரிய தொகை கிடைத்திருக்கிறது இதனால் சிறப்பாக ஆடியே தீரவேண்டும் என்று நினைத்தால் உங்களது ஆட்டம் அவளவுதான் என்று யுவராஜ் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த ஆண்டு அதிகபட்ச தொகையாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் பேட் கம்மின்ஸ் கொல்கத்தா அணிக்கு ஏலம் போகியுள்ளது குறிப்பிடத்தக்கது.இதனால் அவரின் ஆட்டம் மீது தற்போது அனைவரின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Advertisement