கோலி, ரவிசாஸ்திரியின் தவறுகளை விளாசிய யுவராஜ் சிங்க். நாலு வார்த்த கேட்டாலும் நறுக்குன்னு கேட்டுருக்காரு

Yuvraj
- Advertisement -

உலகக்கோப்பை அரை இறுதி போட்டிவரை சென்ற இந்திய அணி, அரையிறுதியில் நியூஸிலாந்திடம் மிக மோசமாக தோற்றது. அதற்க்கு மிக முக்கிய காரணம் இந்திய அணியின் பேட்டிங் சரி இல்லை என்று பலரும் சொன்னார்கள். இது ஒருபுறம் இருக்க இந்திய ரசிகர்கள் தொடங்கி வீரர்கள் வரை பலரும் இந்த தோல்விக்கு மிக முக்கிய காரணம் கோலியும், ரவிசாஸ்திரியும் தான் என்று கூறி வருகின்றனர்.

Yuvraj

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணங்கள் என்னென்ன என்று யுவராஜ் சிங்க் கூறியுள்ளார். அது பற்றி இப்போது பார்ப்போம்.

கிரிக்கெட்டை பொறுத்தவரை 4ம் இடம் என்பது மிக முக்கியமான ஒன்று. அதில் யாரை விளையாட வைக்கலாம் என்ற திட்டமே இந்திய அணியிடம் இல்லாமல் இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு வீரரும் நான்காம் வரிசையில் சரியாக ஆடவில்லை. அதோடு எந்த வீரரையும் இந்திய அணி நான்காம் இடத்திற்காக தயார் செய்த மாதிரி தெரியவில்லை.

உலகக்கோப்பையை மனத்தில் வைத்து நான்காம் இடத்தில் ஆடப்போகும் வீரரை அணி தயார் செய்திருக்க வேண்டும். ஒருவேளை அந்த வீரர் சரியாக ஆடாமல் இருந்திருந்தால் அவரை தட்டி கொடுத்து, நீங்கள் தான் உலகக்கோப்பையில் நான்காம் இடத்தில் ஆடப்போகிறீர்கள் அதனால் கவனமாக ஆடுங்கள் என்று அவரை எச்சரித்திருக்கவேண்டும்.

- Advertisement -

YuvrajSingh

முன்பு நடந்த போட்டிக்காக இந்திய அணி நியூசிலாந்து சென்ற போது அதில் அம்பதி ராயுடு நான்காம் இடத்தில் ஆடினார். அப்படி பட்ட ஒரு வீரர் திடீரென ஓய்வை அறிவித்தது கேட்டதும் எனக்கு வேதனையாக இருந்தது. ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளவேண்டும். எப்போதும் வீரர்களுக்கு சில சறுக்கல்கள் ஏற்படும். அதை அணி புரிந்துகொள்ளவேண்டும்.

yuvraj

ஆனால் ராயுடுவின் ஒரு சில மோசமான ஆட்டத்தை மட்டும் பார்த்து அவரை உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்கிவிட்டார்கள். நான்காம் இடம் என்பது எவ்வளவு மிக முக்கியமானது என்பது குறித்த அடிப்படை அறிவே இல்லாமல் இந்திய அணி நிர்வாகம் செயல்பட்டு இருப்பது வேதனை அளிப்பதாக இருக்கிறது.

yuvi

ரோகித் மற்றும் கோலியை ஆட்டம் இழக்க செய்தால் இந்திய அணியை தோற்கடித்துவிடலாம் என்ற எண்ணம் மற்ற அணிகளுக்கு வந்துவிட்டது. அந்த அளவிற்கு தான் இந்திய அணியின் பேட்டிங் வரிசை இருந்தது. இனி வரும் காலங்களிலாவது நான்காம் இடத்தின் முக்கியத்துவத்தை அறிந்து இந்திய அணி அதற்கான ஒரு வீரரை தயார் படுத்த வேண்டும். மற்ற நாடுகளின் பேட்டிங் வரிசையை பார்த்தாவது கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் எப்படி தரமான பேட்டிங் வரிசையை வைத்திருக்கிறார்கள் என்று யுவராஜ் சிங்க் கூறியுள்ளார்.

Advertisement