ஐ.பி.எல் தொடரில் எனது அதிவேக சதத்தின் சாதனையை முறியடிக்க இவர்கள் 3 பேரால் முடியும் – யூசுப் பதான்

Yusuf-2

இந்திய அணியின் அதிரடி வீரரான யூசப் பதான் 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அறிமுகமானார். அதன் பின்பு இந்திய அணிக்காக 22 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 236 ரன்களை குவித்துள்ளார். மேலும் 57 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள யூசப் பதான் 810 ரன்களை அடித்துள்ளார். இதில் இரண்டு சதங்கள் மற்றும் மூன்று அரைசதங்கள் அடங்கும்.

yusuf 1

சர்வதேச கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 123 ரன்களை எடுத்துள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் ஐபிஎல் தொடரில் மேட்ச் வின்னராக திகழ்ந்த அவர் ஐபிஎல் தொடரில் மட்டும் 174 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3204 ரன்கள் சேர்த்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடியுள்ள அவர் ஆடிய அனைத்து அணிகளிலும் ஒரு முக்கிய வீரராகவும் அதிரடி ஆட்டக்காரவும் திகழ்ந்துள்ளார். மேலும் இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் இர்பான் பதான் சகோதரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Yusuf 1

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அவரின் இந்த ஓய்வு அறிவிப்புக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலதரப்பட்ட தரப்பில் இருந்தும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது. இந்நிலையில் ஆன்லைன் மூலமாக சிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வரும் யூசுப் பதானிடம் ஐபிஎல் தொடரில் உங்களது வேகமான சதத்தை முறியடிக்கப் போகும் இந்திய வீரர் யார் ? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

- Advertisement -

இந்திய வீரராக ஐபிஎல் போட்டிகளில் 37 பந்துகளில் அதிவேக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை யூசுப் பதான் தன்வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரது இந்த சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ள இந்திய வீரர்கள் குறித்த இந்த கேள்விக்கு பதிலளித்த அவர் :

mivskxip

என்னுடைய இந்த சாதனையை ப்ரித்வி ஷா, ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகிய மூன்று பேரில் ஒருவரோ அல்லது மற்ற வீரர்கள் யாராவது அன்றைய நாளில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் என்னுடைய சாதனையை முறியடிக்க முடியும் என்று அவர் பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.