- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரோஹித் பாய் மெசேஜ் கொடுத்தாரு.. விராட் கோலி பாய் அனுபவ மெசேஜே சதமடிக்க காரணம்.. ஜெய்ஸ்வால் பேட்டி

ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 224 ரன்கள் அடித்த நிலையில் அடுத்து விளையாடிய இங்கிலாந்து 247 ரன்கள் குவித்தது. அடுத்ததாக 23 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் விளையாடி இந்தியா 396 ரன்கள் குவித்து அசத்தியது.

அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் சதத்தை அடித்து 118, ஆகாஷ் தீப் 66, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 53 ரன்கள் குவித்தனர். இறுதியில் 374 ரன்களை துரத்தும் இங்கிலாந்து 3வது நாள் முடிவில் 50/1 ரன்களை எடுத்துள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் சதத்தை அடித்த ஜெய்ஸ்வால் அதற்கடுத்தப் போட்டிகளில் தடுமாற்றமாக பேட்டிங் செய்து வந்தார்.

- Advertisement -

நேரில் பாராட்டிய ரோஹித்:

இருப்பினும் இத்தொடரின் கடைசிப் போட்டியில் சில கேட்ச்கள் கொடுத்ததை இங்கிலாந்து தவற விட்டதைப் பயன்படுத்திய அவர் அபாரமாக பேட்டிங் செய்து சதத்தை அடித்தார். முன்னதாக அப்போட்டியின் 3வது நாளில் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா மைதானத்துக்கு நேரடியாக வந்து இந்திய அணிக்கு ஆதரவு கொடுத்தார். அப்போது ரோகித்தை பார்த்து தாம் ஹாய் சொன்னதாக ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

அதற்கு தொடர்ந்து சிறப்பாக விளையாடி சதமடிக்குமாறு ரோஹித் மெசேஜ் கொடுத்ததாகவும் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். அப்படி ரோஹித், விராட் உள்ளிட்ட சீனியர்கள் தமக்கு கொடுத்த மெசேஜ் மற்றும் அனுபவம் சதத்தை அடிக்க உதவியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ரோஹித் பாயை பார்த்த போது நான் ஹாய் சொன்னேன். அதற்கு தொடர்ந்து சிறப்பாக விளையாடுமாறு அவர் எனக்கு மெசேஜ் கொடுத்தார்”

- Advertisement -

இளம் நட்சத்திரம் ஜெய்ஸ்வால்:

“நீங்கள் உங்களுடைய ஆட்டத்தை திட்டமிட்டு விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். என்னுடைய ஆட்டத்தை திட்டமிட்டு எங்கே அடிக்க வேண்டும், எங்கே ரன்களை குவிக்க வேண்டும் என்று பார்த்தேன். அத்துடன் விராட் பாய், ரோஹித் பாய் போன்ற சீனியர் வீரர்களுடன் சேர்ந்து விளையாடும் போது எனக்கு தொடர்ந்து நிறைய மெசேஜ் கிடைத்தன”

இதையும் படிங்க: 516 ரன்ஸ்.. சோபர்ஸ், கவாஸ்கர் ஸ்டீவ் வாக், லக்ஷ்மனை முந்திய சாதித்த ஜடேஜா புதிய உலக சாதனை

“அவர்களுடன் சேர்ந்து விளையாடியது என்னை ஒரு நல்ல மனிதராக வளர உதவியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்கள் விளையாடிய விதம், பங்காற்றிய விதம், தயாரான விதம் போன்றவற்றைப் பார்த்து நானும் கற்றுக் கொண்டேன்” என்று கூறினார். அத்துடன் சச்சினுக்கு பின் 23 வயதில் 6 டெஸ்ட் சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் ஜெய்ஸ்வால் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -