516 ரன்ஸ்.. சோபர்ஸ், கவாஸ்கர் ஸ்டீவ் வாக், லக்ஷ்மனை முந்திய சாதித்த ஜடேஜா புதிய உலக சாதனை

Ravindra Jadeja 2
- Advertisement -

ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியில் முதலில் 224 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து 247 ரன்களை அடித்து 23 ரன்கள் முன்னிலையாகப் பெற்றது. அதைத்தொடர்ந்து விளையாடிய இந்தியா அபாரமாக பேட்டிங் செய்து 396 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் சதத்தை அடித்து 118, ஆகாஷ் தீப் 60, ஜடேஜா, சுந்தர் தலா 53 ரன்கள் அடித்து அசத்தினார்கள். இறுதியாக 374 ரன்களை துரத்தும் இங்கிலாந்து 3வது நாள் முடிவில் 50/1 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக இந்தப் போட்டியில் அடித்த அரை சதத்தையும் சேர்த்து இத்தொடரில் ரவீந்திர ஜடேஜா 6 முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளார்.

- Advertisement -

ஜடேஜா உலக சாதனை:

இதன் வாயிலாக இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரில் அதிக முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் சுனில் கவாஸ்கர் (1979), விராட் கோலி (2018), ரிஷப் பண்ட் (2025) தொடர்களில் தலா 5 முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. அந்த ஆறு 50+ ரன்களை ஜடேஜா 6வது அல்லது கீழ் பேட்டிங் வரிசையில் களமிறங்கி எடுத்துள்ளார்.

இதன் வாயிலாக இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரில் 6 அல்லது அதற்கு கீழ் பேட்டிங் வரிசையில் களமிறங்கி அதிக முறை 50+ ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார். இதற்கு முன் 1966ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் கேர்பீல்ட் சோபர்ஸ் 5 முறை 50+ ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.

- Advertisement -

அசத்திய ஜடேஜா:

அத்துடன் ஒரு டெஸ்ட் தொடரில் 6 அல்லது அதற்கு கீழ் பேட்டிங் வரிசையில் களமிறங்கி அதிக முறை 50+ ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற விவிஎஸ் லக்ஷ்மன் சாதனையையும் ஜடேஜா உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 2002ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற தொடரில் லக்ஷ்மன் 5 முறை 50+ ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.

மேலும் ஒரு வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் 6 அல்லது அதற்கு கீழான பேட்டிங் வரிசையில் களமிறங்கி 6 முறை 50+ ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் ஜடேஜா சமன் செய்துள்ளார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீசின் கேரி அலெக்சாண்டர் (1960/61 ஆஸ்திரேலிய தொடரில்), பாகிஸ்தானின் வசிம் ராஜா (1976/77 வெஸ்ட் இண்டீஸ் தொடரில்) ஆகியோரும் அந்த சாதனையை படைத்துள்ளனர்.

இதையும் படிங்க:

இது போக ஒரு வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் 6 அல்லது அதற்கு கீழான பேட்டிங் வரிசையில் களமிறங்கி 4வது அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் ஜடேஜா நிகழ்த்தியுள்ளார். அந்த பட்டியல்:
1. சர் கேர்பீல்ட் சோபர்ஸ்: 722 (இங்கிலாந்து, 1966)
2. வாசிம் ராஜா: 517 (வெஸ்ட் இண்டீஸ், 1976/77)
3. ரவீந்திர ஜடேஜா: 516 (இங்கிலாந்து, 2025)*
4. ஸ்டீவ் வாக்: 506, (இங்கிலாந்து, 1989)

Advertisement