ஒரு வருஷம் கூட ஆகல. அதுக்குள்ள பேட்டிங் கோச் பதவியில் இருந்து விலகிய யூனிஸ் கான் – விவரம் இதோ

younis
- Advertisement -

கடந்த சில மாதங்களாகவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி, அந்த நாட்டின் கிரிக்கெட் ரசிகர்களாலே பெரிதும் விமர்ச்சனத்திற்கு உள்ளாகி வருகிறது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. குறிப்பாக அந்நாட்டு தனியார் விளையாட்டு இணையதளம் ஒன்றிர்கு பேட்டியளித்து வரும் அந்த அணியின் ஓய்வு பெற்று விட்ட முன்னாள் வீரர்கள் மற்றும் அந்த அணி நிர்வாகத்தினால் வாய்ப்பு மறுக்கப்பட்ட வீரர்கள் என பலரும், அவர்கள் அளிக்கும் பேட்டியில் அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகத்தின் மீதும், பயிற்சியாளர்கள் மற்றும் அணியின் கேப்டனான பாபர் அசாமின் மீதும் வெளிப்படையான குற்றச் சாட்டுகளை வைத்து வருகின்றனர்.

Pak-1

- Advertisement -

இந்நிலையில் அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளரான யூனஸ் கான், திடீரென அந்த பணியில் இருந்து விலகுவதாக தெரிவித்து அதிர்ச்சி அளித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் அணிக்கு இரண்டு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட அவர், ஒரு வருடம்கூட முடியாத சூழ்நிலையில் ராஜினாமா செய்துள்ளது அந்நாட்டு கிரிக்கெட்டில் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடர் வரை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்த யூனஸ் கானின், திடீர் ராஜினாமாவைப் பற்றி பேட்டியளித்திருக்கும் அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகத்தின் தலைமை செயலதிகாரியான வாசிம் கான் கூறியிருப்பிதாவது, யூனஸ் கான் போன்ற அனுபவம் வாய்ந்த நபரை இழப்பது மிகப் பெரிய வருத்தமாக இருக்கிறது.

Younis

இருந்தாலும் எதிர்வரும் இங்கிலாந்து தொடருக்காக நாங்கள் வேறு முடிவை பற்றி யோசித்தாக வேண்டும் என்று கூறியுள்ளார். யூனஸ் கானின் ராஜினாமாவிற்கு என்ன காரணம் என்று அவர் கூற மறுத்துவிட்டார். வருகிற வெள்ளிக் கிழமையன்று இங்கிலாந்திற்கு புறப்படும் பாகிஸ்தான் அணியானது, அங்கு சென்ற பின்னர் மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது.

Younis 2

இந்த தொடர்களில் பாகிஸ்தான் அணியானது பேட்டிங் பயிற்சியாளர் இல்லாமல்தான் விளையாடும் என்றும் இதற்கடுத்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடருக்கு முன்பாகவே புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்றும் பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

Advertisement