- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எங்களோட அதிரடி ஆட்டத்தை இனிமேல் தான் பாக்க போறீங்க – இங்கிலாந்துக்கே சவால் விடும் வகையில் ராகுல் அதிரடி கருத்து

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து கோப்பை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்ட இந்தியா கடைசி போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. அதைத்தொடர்ந்து நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 14ஆம் தேதியன்று தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் அத்தொடரில் 2 – 0 (2) என்ற கணக்கில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்தியா வரும் பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரையும் வென்றாக வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது.

ஏனெனில் தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் இருக்கும் இந்தியா இந்த 2 தொடர்களில் வென்றால் தான் வரும் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷி கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற முடியும். அந்த நிலையில் கேப்டன் ரோகித் சர்மா காயமடைந்து வெளியேறியுள்ள நிலையில் ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி போன்ற முக்கிய வீரர்களும் காயத்தால் இத்தொடரிலிருந்து வெளியேறியுள்ளது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

எங்களோட அதிரடி:

இருப்பினும் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள கேஎல் ராகுல் இத்தொடரில் இந்தியாவை தற்காலிக கேப்டனாக வழி நடத்துகிறார். ஆனால் சமீப காலங்களாகவே பேட்டிங்கில் தடவலாக செயல்பட்டு இந்தியாவின் தோல்விகளுக்கு காரணமாக அமைந்த அவர் கேப்டனாகவும் இதுவரை சிறப்பாக செயல்பட்டதே கிடையாது. இருப்பினும் ரோகித் சர்மா இல்லாத பொறுப்புடன் இந்தியாவை சிறப்பாக வழி நடத்த முயற்சிக்க உள்ளதாக தெரிவிக்கும் ராகுல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்குச் செல்ல இனிவரும் போட்டிகளில் அதிரடியாக செயல்பட வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

குறிப்பாக இங்கிலாந்து அதிரடியாக விளையாடுவது போல இந்தியா தங்களுடைய ஸ்டைலில் அதிரடியாக விளையாடும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.  “நாங்கள் எந்த மனப்போக்குடனும் இத்தொடருக்கு செல்லவில்லை. இந்த குறிப்பிட்ட மைதானத்துக்கு குறிப்பிட்ட வரலாறுகள் உள்ளது. நீங்கள் அதைப் பார்த்து குறிப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு அமர்விலும் அணியின் தேவை வித்தியாசமாக இருக்கும். எனவே நாங்கள் அதை மதிப்பிடுவோம்”

- Advertisement -

“ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் எங்கள் அணியிலிருந்து நீங்கள் நிறைய ஆக்ரோஷமான கிரிக்கெட்டை பார்க்கப் போகிறீர்கள். மேலும் அதிரடியான கிரிக்கெட் என்பது நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதை பொறுத்தது. அந்த வகையில் இங்கிலாந்து விளையாடுவதை நான் பொறுப்பற்ற கிரிக்கெட்டாக பார்க்கவில்லை. அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட மனநிலை இருக்கிறது. அவர்கள் அதைப் பற்றி யோசித்து அணிக்காக பணிபுரியும் தங்கள் வீரர்களை ஆதரிக்கிறார்கள். அது தான் முக்கியம்”

“இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக அவர்கள் விளையாடிய 2 போட்டியையும் பார்த்ததில் மிகவும் உற்சாகமாக இருக்கிறது. நான் அவர்களது ஆட்டங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். குறிப்பாக மிகவும் பயமற்ற மனப்பான்மையுடன் ஆக்ரோசமாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்ப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. அந்த அணுகுமுறை அவர்களுக்கு (இங்கிலாந்து) வேலை செய்கிறது. ஒவ்வொரு அணிக்கும் அதன் சொந்த வழி உள்ளது. அந்த வகையில் நாங்களும் ஒரு சில விஷயங்களை கற்றுக் கொண்டு அதிரடியாக விளையாடுவோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: இங்கிலாந்து வெற்றியால் பாதகமா, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல இந்தியா செய்ய வேண்டியது என்ன?

அதாவது இங்கிலாந்து விளையாடும் அதிரடியான அணுகுமுறையை வரவேற்கும் ராகுல் இந்தியாவும் தங்களது வழியில் அவர்களை விட அதிரடியான அணுகு முறையுடன் விளையாடி இத்தொடரை வெல்வதற்கு முயற்சிக்கும் என்று கூறியுள்ளார். முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் தென்னாபிரிக்க மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று கொடுத்த விராட் கோலி காயத்தால் வெளியேறிய போது 2வது போட்டியில் கேப்டன்ஷிப் செய்த ராகுல் தலைமையில் தோற்ற இந்தியா இறுதியில் 2 – 1 என்ற கணக்கில் கோப்பையை நழுவ விட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by