பிசிசிஐ விடக்கூடாது, ஓய்வில்லாமல் ஐபிஎல் விளையாடிவிட்டு நாட்டுக்காக ஓய்வு கேட்பது சரியல்ல – சீனியர்கள் மீது ஜாம்பவான் அதிருப்தி

Rohith
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 2 – 1 என்ற கணக்கில் கோப்பையை வென்று அசத்தியது. சமீபத்திய டெஸ்ட் போட்டியில் வரலாற்று தோல்வியை பரிசளித்த இங்கிலாந்துக்கு டி20 தொடரில் கேப்டன் ரோகித் சர்மா திரும்பியதும் அட்டகாசமாக செயல்பட்ட இந்தியா தக்க பதிலடி கொடுத்து பழிதீர்த்தது. இதையடுத்து ஜூலை 13-ஆம் தேதியன்று துவங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் கைப்பற்றி இச்சுற்றுப்பயணத்தை வெற்றியுடன் நிறைவு செய்ய இந்தியா போராட உள்ளது.

Virat-Kohli

- Advertisement -

இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இதுவரை ஒரு அரைசதம் கூட அடிக்காமல் தவிப்பது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அதிலும் கடந்த 3 வருடங்களாக அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சதமடிக்க முடியாமல் தவித்து வரும் விராட் கோலி கடுமையான விமர்சனங்களை தினம்தோறும் சந்தித்து வருகிறார். குறிப்பாக பெரிய பெயருக்காக தொடர்ச்சியாக கிடைக்கும் வாய்ப்புகளில் சொதப்பி வரும் அவரை இந்திய அணியிலிருந்து நீக்கும் தருணம் வந்துவிட்டதாக முன்னாள் கேப்டன் கபில்தேவ் சமீபத்தில் கூறியது பெரிய புயலை கிளப்பியுள்ளது.

ரெஸ்ட் சர்ச்சை:
இப்படி ஏற்கனவே ரன்களை அடிக்க முடியாமல் சுமாரான பார்மில் விமர்சனத்திற்கு உள்ளாகி நிற்கும் இவர்கள் ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் சொந்த மண்ணில் நடந்த தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் ஓய்வெடுத்து இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் விளையாடி வருகிறார்கள். ஆனால் அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மீண்டும் இவர்கள் ஓய்வு கேட்டுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற பின் காயம் மற்றும் ஓய்வு காரணமாக இந்த வருடம் நிறைய தொடர்களில் விளையாடாத ரோகித் சர்மா பர்மிங்காமில் நடந்த டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்கவில்லை.INDvsWI

அந்த நிலைமையில் வெறும் 6 போட்டியில் மட்டும் பங்கேற்றுவிட்டு அடுத்ததாக ஓய்வெடுக்கும் அளவுக்கு அப்படி என்ன அதிகப்படியான போட்டிகளில் விளையாடி விட்டாரா, இப்படி அடிக்கடி ஓய்வெடுத்தால் எப்படி அவரது தலைமையில் தரமான வீரர்கள் செட்டாகி உலக கோப்பையை இந்தியாவால் வெல்ல முடியும் என்ற நியாயமான கேள்வியும் ரசிகர்கள் முன்வைக்கின்றனர். மறுபுறம் ஏற்கனவே மோசமான பார்மில் தவிக்கும் விராட் கோலி சமீபத்திய தென் ஆப்ரிக்க தொடரில் ஓய்வெடுத்து இங்கிலாந்துக்கு எதிராக வெறும் 6 போட்டியில் மட்டும் விளையாடிவிட்டு அடுத்ததாக ஓய்வு கேட்பதை பார்த்தால் அந்த அளவுக்கு அதிகப்படியான போட்டிகளில் விளையாடி விட்டாரா என்ற கேள்வி நமக்கே தோன்றுகிறது.

கவாஸ்கர் அதிருப்தி:
அதுபோக ஐபிஎல் 2022 தொடரில் 3 முறை கோல்டன் டக் அவுட்டான அவரை சில மாதங்கள் ஓய்வெடுக்குமாறு ரவிசாஸ்திரி போன்ற முன்னாள் அறிவுறுத்தியதை கேட்காத விராட் கோலி தொடர்ச்சியாக விளையாடினால் தானே பார்முக்கு திரும்ப முடியும் என்று பதிலளித்து விளையாடி வருகிறார். ஆனால் கூறியது போல் தொடர்ந்து விளையாடாமல் இடையே இந்தியாவுக்காக விளையாடும் போது ஓய்வு கேட்டால் என்ன அர்த்தம் என்ற கேள்வியும் நம்மிடம் எழுகிறது. இவை அனைத்தையும் விட ஐபிஎல் தொடரில் விளையாடும் போது இவர்கள் ஒரு போட்டியை கூட தவற விடாமல் விளையாடுகின்றனர்.

- Advertisement -

IND Team

ஆனால் நாட்டுக்காக விளையாடும் போது மட்டும் இப்படி ஓய்வு கேட்கிறார்களே என்ற கோபத்தையும் ரசிகர்களிடம் ஏற்படுத்துகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் ஓய்வு கேட்காத சீனியர் வீரர்கள் நாட்டுக்காக விளையாடும் போது ஓய்வு கேட்பதில் எவ்வித நியாயமும் இல்லை என தெரிவிக்கும் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் இதை பிசிசிஐ அனுமதிப்பதை நிறுத்த வேண்டுமென்று கடுமையாக விமர்சித்துள்ளார். இதுபற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“வீரர்களுக்கு ஓய்வு என்ற அணுகுமுறையை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஐபிஎல் தொடரின்போது ஓய்வெடுக்காத நீங்கள் நாட்டுக்காக விளையாடும் போது ஏன் அதை கேட்கிறீர்கள்? இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நீங்கள் இந்தியாவுக்காக ஓய்வு பற்றி பேசுவதை விட்டுவிட்டு விளையாட வேண்டும். அதுவும் 20 ஓவர் போட்டிகள் உங்களது உடலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. டெஸ்ட் போட்டிகள் வேண்டுமானால் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் டி20 கிரிக்கெட் எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தாதது”

Gavaskar

“முதலில் ஓய்வு என்ற இந்த அணுகுமுறையை பிசிசிஐ கவனிக்க வேண்டும். கிரேட் ஏ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள இந்த வீரர்கள் மாதம்தோறும் நல்ல தொகையை பெறுகிறார்கள். ஏதேனும் உயர்ந்த நிறுவனங்களில் அதன் மூத்த நிர்வாகிகள் இப்படி ஓய்வெடுப்பார்களா? இந்திய கிரிக்கெட் மிகச்சிறந்ததாக மாற வேண்டுமானால் அதற்கான வரையறையை நிர்ணயிக்க வேண்டும். நீங்கள் ஓய்வெடுக்க விரும்பினால் முன்கூட்டியே அனைத்து போட்டிகளிலும் விளையாடுவேன் என்று கொடுக்கும் உத்தரவாதத்தை குறைத்துக்கொண்டு ஓய்வெடுங்கள். அதை விட்டுவிட்டு இந்திய அணிக்காக விளையாட விரும்பவில்லை என்று எப்படி கூற முடியும். அதனால் தான் இந்த கருத்தை நான் ஏற்கவில்லை” என்று கூறினார்.

Advertisement