அதுக்காகவே வேணும் 2011 மாதிரி இந்திய அணியை உடைச்சுறாதீங்க.. ரோஹித், கோலி பற்றி யோக்ராஜ் சிங்

Yograj Singh
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் அடுத்தடுத்தது தோல்விகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வந்த பின் இலங்கை, வங்கதேசம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடர்களில் இந்தியா வென்றது. ஆனால் இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடரில் 27 வருடங்கள் கழித்து தோற்ற இந்தியா சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் டெஸ்ட் தொடரில் முதல் முறையாக வரலாறு காணாத ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது.

அடுத்ததாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் தோற்ற இந்தியா உலக சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறியது. இந்தத் தோல்விகளுக்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சுமாராக பேட்டிங் செய்தது முக்கிய காரணமானது. அதனால் அவர்கள் வருங்கால வீரர்களுக்கு வழி விட்டு ஓய்வு பெறலாம் என்று ஒரு தரப்பு ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள்.

- Advertisement -

டீமை உடைக்காதீங்க:

இந்நிலையில் 2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியை உடைத்தது போல் தற்போதைய அணியை உடைக்கக்கூடாது என முன்னாள் வீரர் யோக்ராஜ் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். எனவே இளம் வீரர்களுக்கு தங்களுடைய அனுபவத்தை பகிர்வதற்காகவே விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

மேலும் யுவ்ராஜ் சிங் போல திறமைக் கொண்ட அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் போன்ற இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி யோக்ராஜ் சிங் பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மாவை கேப்டன்ஷிப் பொறுப்பில் இருந்து நீக்காதீர்கள். விராட் கோலியையும் அணியில் இருந்து நீக்க வேண்டாம் என்று நான் சொல்வேன்”

- Advertisement -

யோக்ராஜ் கோரிக்கை:

“நமது இளம் வீரர்கள் வளர்வதற்காக அந்த 2 ஜாம்பவான்கள் நமக்குத் தேவை. ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்ட மற்ற வீரர்கள் வளர்வதற்கு அந்த 2 ஜாம்பவான்களும் 3 – 4 வருடங்கள் இந்திய அணிக்கு தேவைப்படுகிறார்கள். நாம் வலுவான பெஞ்ச் பலத்தை உருவாக்க வேண்டும். நீங்கள் அணியை எப்போதும் உடைக்க கூடாது”

இதையும் படிங்க: ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி: தங்கள் இந்திய அணியை வெளியிட்ட இர்பான் பதான், கவாஸ்கர்

“2011இல் அது துவங்கப்பட்டது. அப்போது அணி உடைக்கப்பட்டு பவர் ஒருவரிடம் கொடுக்கப்பட்டது. அதனால் அடுத்தடுத்த உலகக் கோப்பைகளில் தோற்ற நாம் 3 – 4 டெஸ்ட் தொடர்களில் வரிசையாக தோற்றோம். விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் என்பதால் நாம் அனைத்து வீரர்களையும் ஒன்றாக எடுத்துச் செல்ல வேண்டும். ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே இந்தியா அடுத்தடுத்த தொடர்களை வென்றது. வெஸ்ட் இண்டீஸ் தவிர்த்து மற்ற அணிகள் அதை செய்ததாக எனக்குத் தெரியவில்லை. எனது இந்த ஆலோசனையை பிசிசிஐ கேட்கும் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.

Advertisement