ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி வரும் பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற உள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாட உள்ளது. நம்பிக்கை நாயகன் ஜஸ்ப்ரித் பும்ரா சமீபத்தில் காயத்தை சந்தித்ததால் அந்தத் தொடருக்கான இந்திய அணியை வெளியிடுவதில் தாமதம் நிலவி வருகிறது. இதற்கிடையே சில முன்னாள் வீரர்கள் தங்களுடைய இந்திய அணியை தேர்ந்தெடுத்து வருகிறார்கள்.
அந்த வரிசையில் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தன்னுடைய இந்திய அணியை தேர்ந்தெடுத்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “சமீபத்தில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியவர்கள் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று நான் சொல்வேன். அந்த வகையில் கேஎல் ராகுல் கடந்த உலகக் கோப்பையில் அற்புதமாக விளையாடினார்”
இந்திய அணி:
“ஸ்ரேயாஸ் ஐயரும் கடந்த உலகக் கோப்பையில் அசத்தியதால் ஆதரவு கொடுக்கப்பட வேண்டும். ஆனால் சமீபத்திய தொடர்களில் அவருக்கு இந்திய அணியில் ஆதரவு கிடைக்கவில்லை. எனவே இந்த இருவரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட வேண்டும். ஸ்ரேயாஸ் 4, ராகுல் 5, ரிஷப் பண்ட் 6வது இடத்தில் விளையாட வேண்டும். அதே போல சஞ்சு சாம்சன் சமீபத்திய போட்டிகளில் சதத்தை அடித்தார்”
“அப்படி நாட்டுக்காக சதத்தை அடித்தவரை எப்படி நீங்கள் விட முடியும்? எனவே அவர் இந்திய அணியில் கண்டிப்பாக இருக்க வேண்டும்” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் மற்றொரு முன்னாள் வீரர் இர்பான் பதான் பேசியது பின்வருமாறு. “உங்களுக்கு பேலன்ஸ் வேண்டுமெனில் ரவீந்திர ஜடேஜா போன்றவர் எட்டாவது இடத்தில் விளையாட வேண்டும்”
கவாஸ்கர், பதான் தேர்வுகள்:
“அதே போல வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் உங்களுடைய அணியில் இருப்பது அற்புதமான வாய்ப்பாகும். அது போன்ற சூழ்நிலையில் நித்திஷ் ரெட்டி விளையாட வேண்டும். ஏனெனில் ஆஸ்திரேலியாவில் அசத்துவது சுலபமல்ல. அதை அவர் செய்துள்ளார். பும்ரா காயத்தால் விலகினால் சிராஜ் விளையாடுவது அவசியம். பும்ரா காயமின்றி விளையாட வேண்டும் என்பதே நம்முடைய நம்பிக்கையாகும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: இனி உங்க இஷ்டத்துக்கு சம்பளம் கிடையாது.. மீண்டும் இந்திய வீரர்களுக்கு செக் வைத்த பி.சி.சி.ஐ – விவரம் இதோ
கவாஸ்கர், பதான் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), யசஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் ஃபண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா. (ரிசர்வ்) சுப்மன் கில், சஞ்சு சாம்சன், முகமது சிராஜ், நிதிஷ் ரெட்டி