இங்கிலாந்தில் தோத்தாலும் கம்பீரை ஒன்னும் சொல்லாதீங்க.. அவங்க இல்லாமையே ஜெய்ச்சது போதாதா? யோக்ராஜ் பேட்டி

Yograj Singh
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்தை அடுத்தப் போட்டியில் தோற்கடித்த இந்தியா பர்மிங்காம் மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணியாக சாதனை படைத்தது. அதனால் தொடரை சமன் செய்து இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா அடுத்ததாக ஜூன் 30ஆம் தேதி துவங்கும் மூன்றாவது போட்டியிலும் வெற்றி காண தயாராகியுள்ளது.

முன்னதாக கௌதம் கம்பீர் பயிற்சியாளராக வந்தது முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கத்துக்குட்டி வங்கதேசத்துக்கு எதிரான தொடரை வென்றதைத் தவிர்த்து அவரது வழிகாட்டுதலில் இந்தியா இதுவரை எந்த தொடரையும் வெல்லவில்லை. குறிப்பாக சொந்த மண்ணில் வரலாற்றிலேயே இந்தியா முதல் முறையாக நியூசிலாந்திடம் ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

கம்பீரை ஒன்னும் சொல்லாதீங்க:

அடுத்ததாக ஆஸ்திரேலிய மண்ணில் 10 வருடங்கள் கழித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை கோட்டை விட்ட இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறியது. இதற்கிடையே விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை கழற்றி விட்ட கௌதம் கம்பீர் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தார். அந்த இளம் அணி முதல் போட்டியில் தோல்வியை சந்தித்ததால் கம்பீர் மீண்டும் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார்.

ஆனால் 2வது போட்டியில் வெற்றி கண்டுள்ளதால் தற்காலிகமாக கம்பீர் ஓரளவு நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார் என்றே சொல்லலாம். இந்நிலையில் விராட், ரோஹித் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமலேயே இந்தியா இரண்டாவது போட்டியில் பிரம்மாண்ட வெற்றி கண்டுள்ளதாக முன்னாள் வீரர் யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார். அதனால் ஒருவேளை இங்கிலாந்து தொடரில் தோற்றாலும் கம்பீரை ஒன்றும் சொல்லாதீர்கள் என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

யோக்ராஜ் பாராட்டு:

அதே சமயம் சுப்மன் கில் தலைமையில் இத்தொடரை இந்தியா வெல்லும் என்று நம்பிக்கைத் தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்திய வீரர்கள் தொடர்ச்சியாக தங்களுடைய ஆட்டத்தை முன்னேற்றி வருகிறார்கள். அவர்களுக்கு நாம் எப்போதும் ஆதரவு கொடுப்போம். கௌதம் கம்பீரைப் பற்றி எதுவும் சொல்லாதீர்கள். அவர் நன்றாகவே செயல்பட்டு வருகிறார்”

இதையும் படிங்க: 3 ஆவது டெஸ்ட் போட்டியில் 6 சிக்ஸ் அடிச்சா போதும்.. சேவாக்கையே பின்னுக்கு தள்ள காத்திருக்கும் – ரிஷப் பண்ட்

“யுவ்ராஜ், டிராவிட், கம்பீர் ஆகியோர் கிரிக்கெட்டில் பெற்றதைப் பயிற்சியின் வாயிலாக மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பி வழங்கி வருகின்றனர். ஒருவேளை நம்முடைய அணி இத்தொடரில் தோற்றாலும் அவர்களை நாம் மோசமாக விமர்சிக்கக்கூடாது. கில் தலைமையில் வெற்றி பெறுவோம் என்று நாம் நம்ப வேண்டும். இதுவரை விராட், ரோஹித் ஆகியோர் இல்லாமல் நம்முடைய அணி செயல்பட்ட விதம் ஆச்சரியமானது. வெல்டன் பாய்ஸ்” என்று பாராட்டினார்.

Advertisement