3 ஆவது டெஸ்ட் போட்டியில் 6 சிக்ஸ் அடிச்சா போதும்.. சேவாக்கையே பின்னுக்கு தள்ள காத்திருக்கும் – ரிஷப் பண்ட்

Pant and Sehwag
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் முதல் போட்டியின் போது முதல் இன்னிங்ஸில் 178 பந்துகளை சந்தித்து 134 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 140 பந்துகளை சந்தித்து 118 ரன்களையும் குவித்து அசத்தியிருந்தார்.

வீரேந்திர சேவாக்கை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் ரிஷப் பண்ட் :

அதன் பின்னர் பர்மிங்காம் நகரில் நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது முதல் இன்னிங்சில் 42 பந்துகளில் 25 ரன்களையும், இரண்டாவது இன்னிங்சின் போது 58 பந்துகளில் 65 ரன்களையும் குவித்த அவர் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் 2 சதம் மற்றும் ஒரு அரைசதம் என அசத்தலான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தி உள்ளார்.

- Advertisement -

மேலும் எதிர்வரும் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் அவரது ஆட்டம் சிறப்பாக இருக்கும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளில் 13 சிக்ஸர்களை விளாசியுள்ள ரிஷப் பண்ட் இன்னும் 6 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான சேவாக் மற்றும் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரை பின்னுக்கு தள்ளி வரலாற்று சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமான அவர் இதுவரை 45 போட்டிகளில் விளையாடி 8 சதம் மற்றும் 16 அரைசதம் என 3290 ரன்களை குவித்துள்ள வேளையில் தற்போதே மிகச்சிறந்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் மாறியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது 27 வயதாகும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் ஒரு சாதனைக்காக காத்திருக்கிறார். அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இதுவரை 45 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடி இருந்தாலும் 86 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்களாக வீரேந்திர சேவாக் (91 சிக்ஸர்கள்) முதலிடத்திலும், ரோஹித் சர்மா (88 சிக்ஸர்கள்) இரண்டாவது இடத்தில் இருக்கின்றனர்.

இதையும் படிங்க : 122 ரன்கள் அடித்தால் போதும்.. ரோஹித் மற்றும் கோலியின் சாதனையை காலி செய்ய காத்திருக்கும் – ரிஷப் பண்ட்

இவ்வேளையில் தற்போது 86 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கும் ரிஷப் பண்ட் எதிர்வரும் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மேலும் 6 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement