தோனி எனும் ஒருத்தருக்காக யுவி, சேவாக், ஹர்பஜன், ஜஹீர் இருந்த வீட்டை கொளுத்தலாமா? யோக்ராஜ் சாடல்

Yograj Singh
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் குறிப்பிட்ட இடைவேளைக்குப்பின் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு மூத்த வீரர்களை கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது வழக்கமாகும். சொல்லப்போனால் தற்சமயத்தில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வருகிறது. அதற்காக விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்களை கழற்றி விட்டுள்ள பிசிசிஐ விரைவில் துவங்கும் இங்கிலாந்து தொடரில் இளம் அணியை தேர்ந்தெடுத்துள்ளது.

இதே போன்ற முடிவை 2011 உலகக் கோப்பை வென்ற பின் தோனி மற்றும் அப்போதைய பிசிசிஐ எடுத்தது என்றே சொல்லலாம். ஆம் அந்த சரித்திர வெற்றிக்குப் பின் டெஸ்ட் போட்டிகளில் தோனி தலைமையில் இந்தியா தொடர்ச்சியாக வெளிநாடுகளில் படுதோல்விகளை சந்தித்தது. அதனால் மூத்த வீரர்களை கழற்றி விட்ட தோனி இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளைக் கொடுத்தார்.

- Advertisement -

தோனி எனும் ஒருவருக்காக:

அதன் காரணமாக ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷிகர் தவான், புவனேஸ்வர குமார், ரவிந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஷமி, உமேஷ் யாதவ் உள்ளிட்ட நிறைய தரமான வீரர்கள் உருவெடுத்தனர். அவர்களை வைத்து 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற தோனி இந்தியாவுக்காக மற்றுமொரு சாதனை படைத்தார். ஒருவேளை அந்த முடிவு எடுக்கப்படாமல் போயிருந்தால் தற்போது தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் இலங்கை தடுமாறுவது போல இந்தியாவும் திணறிக் கொண்டிருக்கும் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் 2012இல் தோனி எனும் ஒருவருக்காக ஜாம்பவான் வீரர்கள் நிறைந்த மொத்த இந்திய அணியையும் பிசிசிஐ கொளுத்தியதாக முன்னாள் வீரர் மற்றும் யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் மறைமுகமாக கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது. “நம்மிடம் சௌரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மன், ஜவஹல் ஸ்ரீநாத், அனில் கும்ப்ளே மற்றும் பலர் இருந்தனர்”

- Advertisement -

மொத்த வீட்டை கொளுத்தலாமா:

“அவர்களுடன் ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், வீரேந்திர சேவாக், முகமது கைஃப், ஜாஹீர் கான் போன்ற இளைஞர்களும் இருந்தனர். அந்த அனுபவ வீரர்கள் நன்றாக வழி நடத்தியதாலேயே இளம் வீரர்கள் வரலாற்றின் மகத்தான வீரர்களாக உருவெடுத்தனர். அவர்களுக்கு கைமாறாக நாம் என்ன செய்தோம்? வெறும் ஒருவருடைய பக்கம் நின்று கொண்டு அவர்கள் அனைவரும் இருந்த வீட்டை மொத்தமாக கொளுத்தினோம்”

இதையும் படிங்க: நிரூபிக்க ஒன்னுமில்லாத கோலி ரிட்டையராகாம சதம் அடிச்சாலும்.. அந்த தரம் வராது.. கில்கிறிஸ்ட் பாராட்டு

“அந்த ஒருவருடைய பெயரை நான் சொல்ல மாட்டேன். அவர் எங்கே இருக்கிறார், என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள். சச்சின், யுவராஜ், கம்பீர், சேவாக் போன்றவர்கள் எப்போதும் வடிகாலுக்கு செல்ல மாட்டார்கள். அவர்கள் எப்போதும் நட்சத்திரங்களாக ஜொலிக்கக் கூடியவர்கள். ஆனால் நீங்கள் (பிசிசிஐ) 2011 உலகக்கோப்பை வென்ற அணியில் இருந்தவர்களின் கேரியரை அழித்தீர்கள்” என்று கூறினார்.

Advertisement