நிரூபிக்க ஒன்னுமில்லாத கோலி ரிட்டையராகாம சதம் அடிச்சாலும்.. அந்த தரம் வராது.. கில்கிறிஸ்ட் பாராட்டு

Adam Gilchrist
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தது பலரையும் ஏமாற்றமடைய வைத்தது. 2011 – 2025 வரை 123 போட்டிகளில் விளையாடிய அவர் 9230 ரன்களை அடித்து இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றினார். 30 சதங்களையும் அடித்த அவர் சச்சின் டெண்டுல்கருக்கு பின் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலுமாக செயல்பட்டு வந்தார்.

அதை விட 2014இல் ஐசிசி தரவரிசையில் 7வது இடத்தில் திண்டாடிய இந்தியாவை அபாரமாக வழி நடத்திய அவர் 2016 – 2021 வரை உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்தார். அவரது தலைமையில் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக வெற்றியைப் பெற்ற இந்தியா மொத்தம் 40 வெற்றிகளைக் குவித்தது. அதன் வாயிலாக வெற்றிகரமான இந்திய டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி சாதனை படைத்தார்.

- Advertisement -

கில்கிறிஸ்ட் பாராட்டு:

இருப்பினும் சமீப வருடங்களாக தடுமாறி வந்த அவர் 36 வயதிலும் மிகச்சிறந்த ஃபிட்னஸை கொண்டுள்ளார். அதனால் அடுத்து நடைபெறும் இங்கிலாந்து தொடருக்கு முன்பாக அவர் ஓய்வு பெற்றது பலரையும் ஏமாற்றமடைய வைத்தது. குறிப்பாக நல்ல ஃபிட்னஸ் கொண்டுள்ள விராட் கோலி இன்னும் சில வருடங்கள் விளையாடி சதங்களை அடித்து 10000 ரன்கள் அடிக்கத் தகுதியானவர் என்று வீரேந்திர சேவாக், மனோஜ் திவாரி போன்றவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் விராட் கோலி இங்கிருந்து ஓய்வு பெறாமல் தொடர்ந்து விளையாடி சதத்தை அடித்தாலும் அது பழைய தரத்தில் இருக்காது என்று ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். எனவே விராட் கோலி தக்க சமயத்தில் விடை பெற்றுள்ளதாக பாராட்டும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “விராட் கோலியை வாழ்த்துகிறேன். ஓய்வு முடிவு அவரிடமே வந்ததில் எனக்கு மகிழ்ச்சி”

- Advertisement -

தரம் இருக்காது:

“அவர் பத்திரிகைகளில் அதிகம் பேசப்படும் யூகங்களின் காலகட்டத்தில் சவாரி செய்யவில்லை. வெளிப்புற குரல்களால் தீர்மானிக்கப்படாத அவர் களத்தில் விளையாடி தம்முடைய நிலையை உணர்ந்து நாளின் இறுதியில் ஓய்வை அறிவித்தார். அவருக்கு ஆஸ்திரேலிய தொடருக்குப்பின் ஓய்வு பற்றி சிந்திக்க கொஞ்சம் நேரம் கிடைத்தது. ஒரு முடிவுக்கு அவர் வந்துள்ளது எனக்குப் பிடிக்கிறது”

இதையும் படிங்க: வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணிக்காக விளையாடணுமா? முக்கிய அறிவுரையை வழங்கிய – ராகுல் டிராவிட்

“டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி தொடர்ந்து விளையாடினால் இன்னும் சில சதங்களை அடித்திருப்பார் என்று நிறைய மக்கள் நினைக்கலாம். ஆனால் அந்த சதங்கள் இனிமேலும் நீண்ட வருடத்திற்கு முன் விராட் கோலி நிர்ணயித்த பழைய தரத்திற்கு நிகராக இருக்காது. சமீப காலங்களாக அவருடைய ஆட்டத்தில் நாம் கொஞ்சம் சரிவைப் பார்த்தோம். அதை ஒப்புக்கொண்ட விராட் கோலி யாருக்காகவும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை” என்று கூறினார்.

Advertisement