
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணிக்காக மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்தார். ஆனால் மும்பை அணியில் தனக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் பெரிய ஏமாற்றம் அடைந்தார். அதனை தொடர்ந்து கோவா அணிக்காக மாறிய அவர் டொமஸ்டிக் போட்டிகளில் தற்போது கோவா அணிக்காக விளையாடி வருகிறார்.
சச்சின் டெண்டுல்கரின் மகனான இவர் சிறு வயதில் இருந்தே கிரிக்கெட்டின் மீதுள்ள ஆர்வத்தால் கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் இன்று வரை அவரால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. அதோடு உள்ளூர் போட்டிகளில் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
ஐபிஎல் போட்டிகளில் கூட மும்பை இந்தியன்ஸ் அணியை தவிர வேறு எந்த ஒரு அணியும் அவரை விலைக்கு வாங்குவது கிடையாது. ஐ.பி.எல் தொடரில் கூட இதுவரை அவருக்கு 5 போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த 5 போட்டிகளில் அவர் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.
இப்படி அவரது கரியர் மோசமான நிலையிலேயே உள்ள வேளையில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக இருக்கும் அர்ஜுன் டெண்டுல்கருக்கு வேகப்பந்துவீச்சு செட் ஆகாது என இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : அர்ஜுன் டெண்டுல்கர் என்னிடம் வந்தால் அடுத்த 6 மாதத்தில் அவரை உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக நான் மாற்றி காட்டுவேன்.
ஏனெனில் அவருக்கு வேகப்பந்து வீச்சை விட பேட்டிங்கில் தான் நல்ல திறமை இருக்கிறது. என்னிடம் 12 நாட்கள் மட்டுமே பயிற்சி பெற்று சென்றபோது அவர் ரஞ்சி போட்டியில் சதம் அடித்திருந்தார். அப்படி இருக்கையில் ஒரு ஆறு மாதம் என்னிடம் இருந்தால் அவரை நிச்சயம் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக என்னால் மாற்ற முடியும்.
இதையும் படிங்க : ஒருமுறை இல்லை இரண்டு முறை மும்பை அணி தோற்றுவிட்டது.. இஷான் கிஷனின் பேன் ஆகிட்டேன் – ஹர்பஜன் சிங்
சிறந்த பேட்ஸ்மேனாக மாறுவதற்கு உண்டான அனைத்து தகுதியும் இருந்தும் அவரை ஏன் வேகப்பந்து வீச்சாளராக விளையாட வைத்து அவரது திறமையை வீணடிக்கிறார்கள் என்று தெரியவில்லை? நிச்சயம் அவரால் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக வர முடியும் என யோக்ராஜ் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.