50 வயது வரை ஆட வேண்டிய ரோஹித், கோலியை வீட்டுக்கு அனுப்பிய இந்தியா.. 2013 மாதிரி விழும்.. யோக்ராஜ் பேட்டி

Yograj Singh
- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு பெற்றுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்திய அவர்கள் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றினர். இருப்பினும் 36, 37 வயதை கடந்து விட்ட அவர்கள் கடந்த 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ஒன்றாக ஓய்வு பெற்றனர்.

ஆனால் கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் சுமாராக விளையாடிய அவர்கள் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தனர். இருப்பினும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியா 12 வருடங்கள் கழித்து வெல்ல அவர்கள் முக்கிய பங்காற்றினர். அதனால் அடுத்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர்கள் விளையாடுவார்கள் என்று ரசிகர்கள் நம்பினர்.

- Advertisement -

விடைபெற்ற ஜாம்பவான்கள்:

இருப்பினும் 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை முன்னிட்டு புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இளம் அணியை உருவாக்க விரும்புகிறார். அதற்காக அவர் சீனியர் வீரர்களை கழற்றி விட பிசிசிஐக்கு பரிந்துரை செய்துள்ளார். அதை ஏற்றுக் கொண்ட தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் முதலில் ரோஹித்தை கழற்றி விட முடிவெடுத்துள்ளார்.

அதற்கு முன்பாக மரியாதையுடன் விடைபெற்ற ரோஹித்தின் நண்பனாக விராட் கோலியும் ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் 2011 உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் இதே போல சீனியர் வீரர்களை கழற்றி விட்ட இந்திய அணி 2013/14இல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் 8 படுதோல்விகளை சந்தித்தது. அதே போல விராட் கோலி, ரோஹித் சர்மாவை வீட்டுக்கு அனுப்பியுள்ள இந்திய அணி அடுத்த இங்கிலாந்து தொடரில் தோல்வியை சந்திக்கும் என்று முன்னாள் வீரர் யோக்ராஜ் சிங் கூறியுள்ளார்.

- Advertisement -

50 வயது வரை:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மிகப்பெரிய வீரரான விராட் கோலி ஓய்வு பெற்றது கண்டிப்பாக இந்தியாவுக்கு இழப்பு. 2011இல் நிறைய சீனியர்கள் ஓய்வு பெற்றது, நீக்கப்பட்டது போன்ற விஷயங்களால் இந்திய அணி விழுந்தது. ஏனெனில் பேக்-அப் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. விராட், ரோகித்திடம் இப்போதும் நிறைய கிரிக்கெட் எஞ்சியுள்ளதாக நான் கருதுகிறேன்”

இதையும் படிங்க: கோலியின் ஒய்வு உலக கிரிக்கெட்டுக்கே இழப்பு.. இந்திய ரசிகர்களை விட அதான் நிறைய மிஸ் செய்யும்.. கிளார்க்

“நீங்கள் முழுமையாக இளம் வீரர்களை மட்டுமே வைத்து அணியை உருவாக்கினால் அது எப்போதும் கீழே விழும். இனியும் சாதிக்க எதுவுமில்லை என்று கருதி விராட் கோலி ஓய்வு பெற்றிருக்கலாம். வீரேந்திர சேவாக், ரோஹித் சர்மா போன்றவர்கள் முன்னதாகவே ஓய்வு பெற்று விட்டனர். அவர்களைப் போன்ற மகத்தான வீரர்கள் 50 வயது வரை விளையாடியிருக்க வேண்டும். அவர்கள் ஓய்வு பெற்றதால் நான் சோகமடைந்துள்ளேன். ஏனெனில் தற்போது இளம் கிரிக்கெட் வீரர்களை ஊக்கப்படுத்த யாருமில்லை” என்று கூறினார்.

Advertisement