பதான் சொல்ற மாதிரி தோனி, கபில் தேவ்.. பல இந்திய வீரர்களின் வீரர்களை நாசம் பண்ணிட்டாங்க.. யோக்ராஜ் சிங்

N Jagadeesan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ். தோனி உலகிலேயே 3 விதமான ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ளார். 2010ஆம் ஆண்டு முதல் முறையாக அவருடைய தலைமையில் இந்தியா நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக முன்னேறி சாதனை படைத்தது. முன்னதாக 2011 உலகக் கோப்பைக்கு பின் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு சீனியர்களை கழற்றி விட்ட தோனி இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தார்.

அதன் பயனாக விராட் கோலி, ரோஹித், தவான், அஸ்வின், ஜடேஜா போன்ற இளம் வீரர்களை வைத்து தோனி 2013 சாம்பியன்ஸ் டிராபியையும் வென்று காட்டினார். ஒருவேளை அந்த தைரியமான முடிவை அவர் எடுக்காமல் போயிருந்தால் தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் பாகிஸ்தான், இலங்கை போல இந்தியாவும் தடுமாறியிருக்கும் என்றே சொல்லலாம்.

- Advertisement -

இர்பான் பதான் விமர்சனம்:

ஆனால் அதற்காக தங்களுடைய கேரியரில் கடைசிக் காலங்களில் தோனி வாய்ப்பளிக்காமல் கழற்றி விட்டதாக சேவாக், கம்பீர், இர்பான் பதான் ஆகியோர் விமர்சித்திருந்தனர். அந்த வரிசையில் தோனி புகைப்பதற்கு தேவையான எடுபுடி வேலைகளை செய்யும் வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பளித்ததாக இர்ஃபான் பதான் 5 வருடங்களுக்கு முன்பாக விமர்சித்திருந்தார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக காணப்படுகிறது.

அதைப்பற்றி கேட்டதற்கு தோனி மட்டுமல்ல கபில் தேவ், பிஷன் சிங் பேடி ஆகியோரும் தங்களுக்கு சாதகமான வீரர்களை தேர்ந்தெடுத்து நிறைய இந்திய வீரர்களின் கேரியரை அழித்ததாக யோக்ராக் சிங் விமர்சித்துள்ளார். யுவராஜ் சிங் தந்தையான அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இது இர்பான் பதான் சொன்னது மட்டும் கிடையாது. அதைப் பற்றி கௌதம் கம்பீர் பேசியதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்”

- Advertisement -

யோக்ராஜ் விமர்சனம்:

“அதை வீரேந்திர சேவாக்கும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்திய அணியிலிருந்து ஈ’யை போல தூக்கி எறியப்பட்டதை குறித்து ஹர்பஜன் சிங்கும் பேசியுள்ளார். தோனி அதை எதற்காக ஏன் செய்தார் என்பதற்காக நீங்கள் குழுவை அமைக்கலாம். ஏனெனில் எம்.எஸ். தோனி அதற்கான பதிலை சொல்ல விரும்ப மாட்டார். பொதுவாகவே தவறு செய்தவர்கள் பதில் சொல்ல விரும்ப மாட்டார்கள்”

இதையும் படிங்க: துலீப் கோப்பை செமி ஃபைனல்: 148 ரன்ஸ்.. தெற்கு அணியை தாங்கி பிடிக்கும் தமிழக வீரர் ஜெகதீசன்

“இங்கே நான் பிஷன் சிங் பேடி, கபில் தேவ், எம்எஸ் தோனி ஆகியோரைப் பற்றியும் பேசுவேன். நான் உடன் இருந்தவர்களைப் பற்றி பேச முடியும். அவர்கள் வீரர்களை குப்பையை போல் நடத்தினார்கள். 2 தவறுகள் ஒரு சரியை உருவாக்க முடியாது. நம்முடைய கிரிக்கெட்டர்கள் மற்றும் அணி நமது கேப்டனால் அழிக்கப்பட்டது என்று நான் வெளிப்படையாக சொல்வேன்” எனக் கூறினார்.

Advertisement