இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மிகச்சிறந்த வீரராக அறியப்படுகிறார். இருப்பினும் அவருடைய மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இதுவரை தனக்கென்று ஒரு கால் தடத்தைப் பறிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். உள்ளூரில் மும்பை அணிக்காக விளையாடிய அவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் நீண்ட வருடங்களாக பெஞ்சில் அமர்ந்திருந்தார்.
அதன் பின் கோவா அணிக்கு மாறிய அர்ஜுன் டெண்டுல்கர் சதத்தை அடித்து ஓரளவு அசத்தினார். அதனால் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக அறிமுகமாகும் வாய்ப்பைப் பெற்ற அவர் 120 கி.மீ வேகத்தில் வீசுவதற்கே திணறினார். அதைப் பயன்படுத்திய பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் அவரை அடித்து நொறுக்கி தெறிக்க விட்டார்கள்.
யுவ்ராஜிடம் ஒப்படைங்க:
அதனால் அடுத்த போட்டியிலேயே நீக்கப்பட்ட அர்ஜுன் டெண்டுல்கர் இதுவரை ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் தம்முடைய மகன் யுவராஜ் சிங் தலைமையில் பயிற்சிகளை எடுத்தால் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் போல அர்ஜுன் டெண்டுல்கர் பேட்டிங்கில் மிரட்டுவார் என்று யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார். ஏற்கனவே யுவராஜ் சிங் தலைமையில் வளர்ந்த அபிஷேக் சர்மா ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வருகிறார்.
அதே போல அர்ஜுன் டெண்டுல்கரும் சாதிக்க முடியும் என்று யோக்ராஜ் சிங் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவருக்கு பவுலிங் பொருந்தாது என்றும் யோக்ராஜ் சிங் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அர்ஜுனை பொறுத்த வரை பந்து வீச்சில் குறைவான கவனமும் பேட்டிங்கில் அதிக கவனமும் செலுத்துமாறு ஏற்கனவே தெரிவித்துள்ளேன்”
அடுத்த கெய்ல் ரெடி:
“சச்சின் டெண்டுல்கர் மகனை யுவராஜ் சிங் தனது சிறகுகளுக்குள் கொண்டு வந்தால் 3 மாதங்களில் அவர் அடுத்த கிறிஸ் கெய்லாக வருவார் என்று நான் பந்தயம் கட்டுவேன். ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்கள் அடிக்கடி காயத்தை சந்திப்பார்கள். அதனால் அவர்களால் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பௌலிங் செய்ய முடியாது”
இதையும் படிங்க: இனி தவறுகளை செய்ய வாய்ப்பே இல்ல.. பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு குறித்து பேசிய – ராஜஸ்தான் கோச் டிராவிட் பேட்டி
“எனவே யுவராஜ் சிங்கிடம் அர்ஜுன் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று நான் நீண்ட காலமாக நினைத்து வருகிறேன்” எனக் கூறினார். முன்னதாக யோக்ராஜ் சிங்கிடம் ஏற்கனவே அர்ஜுன் டெண்டுல்கர் சிறிது காலம் பயிற்சிகளை எடுத்தார். இருப்பினும் அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



