- Advertisement -
ஐ.பி.எல்

தோனி, யுவ்ராஜ் சிங் தான் இந்த விடயத்தில் பெஸ்ட்.. ஷ்ரேயாஸ் ஐயரால் அது முடியாது – மீண்டும் விமர்சித்த யோக்ராஜ் சிங்

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி மீண்டும் ஒருமுறை கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. பஞ்சாப் அணி இப்படி இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது அந்த அணியின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருந்தது.

ஷ்ரேயாஸ் ஐயரால் இது முடியாது : யோக்ராஜ் சிங்

ஏற்கனவே இந்த இறுதிப் போட்டி முடிந்ததும் இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவ்ராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் பஞ்சாப் அணி தோல்வியை சந்தித்ததற்கு காரணம் ஷ்ரேயாஸ் ஐயர் தான் என்றும் அவர் 1 ரன்னில் ஆட்டமிழந்ததால் தான் அந்த போட்டி பஞ்சாப் பணியை விட்டு சென்றதாகவும் விமர்சித்திருந்தார்.

- Advertisement -

அதுமட்டுமின்றி ஷ்ரேயாஸ் ஐயர் செய்தது கிரிமினல் குற்றம் என்றும் அவருக்கு இரண்டு போட்டியில் விளையாட தடை விதிக்கலாம் என்று கடுமையாக சாட்டியிருந்தார். இந்நிலையில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி தோற்றத்தை வைத்து மீண்டும் ஒருமுறை யோக்ராஜ் சிங் ஷ்ரேயாஸ் ஐயரை விமர்சிக்கும் விதமாக ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : ஆர்.சி.பி அணி அடித்த 190 ரன்களை பஞ்சாப் அணியால் சுலபமாக துரத்தி இருக்க முடியும். ஆனால் பஞ்சாப் பணியால் அந்த இலக்கை எட்ட முடியாமல் போக ஷ்ரேயாஸ் ஐயர் ஆடிய பொறுப்பில்லாத ஆட்டம் தான் முக்கிய காரணம் என்று விமர்சித்துள்ளார்.

- Advertisement -

அதோடு இந்திய அணிக்கு கிடைத்த மிகச்சிறந்த ஃபினிஷர்கள் என்றால் யுவ்ராஜ் சிங் மற்றும் தோனி இருவர் மட்டும் தான். அவர்கள் இருவரும் சேர்ந்து இந்திய அணிக்காக 92 போட்டிகளை வென்று கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக தோனியை விட யுவ்ராஜ் நிறைய போட்டிகளில் வெற்றிபெற்று கொடுத்து இருக்கிறார்.

இதையும் படிங்க : இதுமட்டும் நடந்தா விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வருவாரு – மைக்கல் கிளார்க் கருத்து

ஆனால் ஷ்ரேயாஸ் ஐயரால் அதுபோன்று ஒரு சிறந்த பினிஷராக மாற முடியாது. என்னை பொறுத்தவரை பஞ்சாப் அணி இறுதிப்போட்டியில் தோற்றதற்கு மிகப்பெரிய குற்றவாளி ஷ்ரேயாஸ் ஐயர் தான் என யோக்ராஜ் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -