இதுமட்டும் நடந்தா விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வருவாரு – மைக்கல் கிளார்க் கருத்து

Michael Clarke
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த மாதம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருந்த விராட் கோலி தனது 36-வது வயதிலேயே டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றது ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை அளித்தது. ஏனெனில் இன்றளவும் உடற்தகுதியில் மிகவும் பிட்டாக இருக்கும் அவரால் நிச்சயம் இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருக்க முடியும்.

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு திரும்புவார் : மைக்கல் கிளார்க்

ஆனால் முன்கூட்டியே அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தது. அதிலும் குறிப்பாக எதிர்வரும் இங்கிலாந்து தொடரானது அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் முதல் தொடராக அமைய இருப்பதினால் நிச்சயம் இந்த தொடரில் அவர் விளையாடி இருக்கலாம். அதுமட்டும் இன்றி அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடியும் வரை அவரால் விளையாட முடிந்திருக்கும் என்றும் ரசிகர்கள் நினைத்திருந்தனர்.

- Advertisement -

ஆனால் விராட் கோலி இப்படி ஒரு திடீர் முடிவை எடுத்தது விமர்சகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்திருந்தது. ஏற்கனவே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு அறிவித்திருந்த வேளையில் விராட் கோலியும் ஓய்வை அறிவித்தது இந்திய அணிக்கு இரட்டிப்பு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி (5-0) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தால் நிச்சயம் மீண்டும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வருவார் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்திய அணி இங்கிலாந்து சென்று ஐந்துக்கு பூஜ்யம் (5-0) என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தால் மீண்டும் ரசிகர்கள் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று விரும்புவார்கள். அதோடு கேப்டன் மற்றும் இந்திய அணியின் நிர்வாகமும் அவரை மீண்டும் டெஸ்ட் போட்டிகளுக்கு அழைத்தால் அவர் ஓய்வு முடிவிலிருந்து திரும்பி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வருவார் என்று நம்புகிறேன்.

இதையும் படிங்க : 6, 6, 4, 6.. அம்பயரால் 4 ரன்னில் மிஸ்.. வெ.இ அணியை வெளுத்து வாங்கிய பட்லர்.. இங்கிலாந்து அசத்தல் வெற்றி

டெஸ்ட் கிரிக்கெட்டை மிகப்பெரிய அளவில் விராட் கோலி நேசிக்கிறார். ஐபிஎல் கோப்பை வென்றபோது கூட டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஐந்து மடங்கு கீழ் தான் இந்த கோப்பை என்றும் விராட் கோலி கூறியிருந்தார். எனவே அவர் நிச்சயம் மீண்டும் டெஸ்ட் போட்டிகளுக்கு திரும்ப வாய்ப்புள்ளது என்று நினைக்கிறேன். டெஸ்ட் போட்டியிகளிலிருந்து விராட் கோலி விலகியது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு ஒரு பெரிய பேரிழப்பு என்று நினைக்கிறேன் என மைக்கேல் கிளார்க் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement