வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து வென்றது. அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டி ஜூன் 6ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு செஸ்டர்-லே-ஸ்ட்ரீட் நகரில் நடைபெற்றது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பென் டக்கெட் 1 (4) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அடுத்ததாக வந்த ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடினார். எதிர்புறம் ஜேமி ஸ்மித் தம்முடைய பங்கிற்கு 4 பவுண்டரி 2 சிக்சருடன் 38 (20) ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினார்.
ஜோஸ் பட்லர் அசத்தல்:
அடுத்ததாக வந்த கேப்டன் ஹரி ப்ரூக் 6 (5) ரன்னில் ரோஸ்டன் சேஸ் சுழலில் கிளீன் போல்ட்டானார். மறுபுறம் தொடர்ந்து அசத்திய பட்லர் 6வது ஓவரில் அல்சாரி ஜோசப்’க்கு எதிராக 6, 6, 4, 6 என அடுத்தடுத்த பௌண்டரிகளை பறக்க விட்டு 25 பந்துகளில் அரை சதத்தை அடித்து மிகச்சிறப்பாக பேட்டிங் செய்தார். எதிர்ப்புறம் வந்த டாம் பாண்டன் 3 (4) ரன்னில் ரசல் வேகத்தில் விக்கெட்டை இழந்தார்.
மறுபுறம் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை வெளுத்து வாங்கிய ஜோஸ் பட்லர் சதத்தை நெருங்கினார். அப்போது அல்சாரி ஜோசப் வீசிய 19வது ஓவரில் 4வது பந்தில் எல்பிடபுள்யூ முறையில் அவுட்டான அவர் ரிவியூ எடுத்தார். அதை சோதித்த போது ஸ்டம்ப் மேலே பந்து லேசாக மட்டுமே பந்து உரசிக்கொண்டு சென்றது தெரிந்தது. இருப்பினும் களத்தில் இருந்த நடுவர் அவுட் கொடுத்த காரணத்தால் 3வது நடுவரும் அதே தீர்ப்பை (அம்பயர்ஸ் ஃகால்) மீண்டும் வழங்கினார்.
இங்கிலாந்து வெற்றி:
அதனால் 6 பவுண்டரி 4 சிக்சருடன் 96 (59) ரன்களில் அவுட்டான ஜோஸ் பட்லர் 4 ரன்னில் சதத்தை தவற விட்டு ஏமாற்றத்துடன் சென்றார். இறுதியில் ஜேக்கப் பேத்தல் 23* (23) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் இங்கிலாந்து 188/6 ரன்களை எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக ரோமாரியா செஃபார்ட் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
இதையும் படிங்க: டிஎன்பிஎல்: 105 ரன்ஸ்.. அபராஜித் அதிரடி பார்ட்னர்ஷிப்.. திருப்பூரை 16 ஓவரிலேயே சாய்த்த சேப்பாக் கில்லீஸ்
அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியை சிறப்பாக பவுலிங் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 167/9 ரன்களுக்கு மடக்கி பிடித்தது. அந்த அணிக்கு ஜான்சன் சார்லஸ் 18, கேப்டன் ஷாய் ஹோப் 3, ரூதர்போர்ட் 2, ரோவ்மன் போவெல் 13, ஆண்ட்ரே ரசல் 15 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினர். அதிகபட்சமாக எவின் எவின் லெவிஸ் 34, சேஸ் 24 ரன்கள் எடுத்தனர். அதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்துக்கு 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அந்த அணிக்கு அதிகபட்சமாக லியம் டாசன் 4, ஜேக்கப் பேத்தல் 2, மேத்தியூ போட்ஸ் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.



