சச்சின் மாதிரி திறமை கொண்ட அர்ஜுன்.. சிறந்த வீரராக இப்படி மாத்தி ஆடனும்.. யோக்ராஜ் அட்வைஸ்

Arjun Tendulkar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் உலக வரலாற்றில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். 100 சதங்கள் அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரராக ஏராளமான உலக சாதனை படைத்துள்ள அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். இருப்பினும் அவருடைய மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இதுவரை கிரிக்கெட்டில் துரும்பளவு கூட சாதிக்கவில்லை என்றே சொல்லலாம்.

வலது கை வீரராக பல சாதனைகள் படைத்த சச்சின் டெண்டுல்கர் தம்முடைய மகன் அர்ஜுன் இடதுகை வீரராக கிரிக்கெட்டில் சாதிக்க விரும்பினார். அதற்காக சிறுவயதிலேயே அவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் வாய்ப்பையும் சச்சின் கொடுத்தார். அதனால் சிறுவயதிலேயே உயர்தர பயிற்சிகளையும் பல நட்சத்திர வீரர்களுடன் பழகி ஆலோசனைகள் பெறும் வாய்ப்பையும் அர்ஜுன் பெற்றார்.

- Advertisement -

மாத்தி யோசிங்க:

சில வருடங்கள் கழித்து மும்பை அணிக்காக அறிமுகமாகி விளையாடிய அவர் 120 – 130 கி.மீ என்ற குறைவான வேகத்தில் பந்துகளை வீசினார். அதைப் பயன்படுத்தி எதிரணி பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கியதால் அடுத்தப் போட்டியிலேயே அர்ஜுன் கழற்றி விடப்பட்டார். அதனால் தன்னுடைய திறமையை மெருகேற்றுவதற்காக உள்ளூரில் மும்பை அணியிலிருந்து வெளியேறிய அர்ஜுன் கோவா அணிக்காக வருகிறார்.

அடுத்த ஐபிஎல் தொடரில் மும்பை அணியிலிருந்து டிரேடிங் முறையில் விலகிய அவர் லக்னோ அணிக்காக விளையாட தேர்வாகியுள்ளார். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் போல அர்ஜுனும் சிறந்த வீரராக பேட்ஸ்மேனாக விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் யோக்ராஜ் சிங் அறிவுறுத்தியுள்ளார். இதுவரை பவுலிங் ஆல்ரவுண்டராக விளையாடி வரும் அர்ஜுன் இனிமேல் மாற்றி யோசித்து பேட்ஸ்மேனாக விளையாட வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

சச்சின் போல வருவதற்கு:

“இதற்கு முன் அர்ஜுன் பேட்டிங் செய்ததை நான் பார்த்ததில்லை. அதனால் வலைப்பயிற்சியில் அவருடைய ஆட்டத்தைப் பார்க்க நான் சென்றேன். அங்கே அவர் பவுண்டரி, சிக்ஸர்களை பறக்க விட்டார். அதனால் இவரை ஏன் நீங்கள் பேட்டிங் செய்ய வைக்கவில்லை? என்று அவருடைய பயிற்சியாளரிடம் கேட்டேன். சிறந்த தரத்தைக் கொண்ட பேட்ஸ்மேனான அவர் தன்னுடைய தந்தையை போல பேட்டிங் செய்கிறார்”

இதையும் படிங்க: இந்திய டெஸ்ட் அணிக்கு கோச்சாக வருவீங்களா? ரசிகரின் கேள்விக்கு ஒற்றை வார்த்தையில் பதிலளித்த – ஜேசன் கில்லெஸ்பி

“என்னிடம் பயிற்சியில் தினந்தோறும் 3 மணி நேரம் பயிற்சிகளை எடுத்த அவர் 12 நாட்கள் கழித்து சென்று ரஞ்சிக் கோப்பையில் சதமடித்தார். இருப்பினும் அவரை நீங்கள் மேற்கொண்டு ஒரு முறை கூட பேட்டிங் செய்ய வைக்கவில்லை. அதனால் ஐபிஎல் தொடரில் அவரை 2 – 3 போட்டிகளில் ஓப்பனிங்கில் விளையாட வையுங்கள் என்று மும்பை அணிக்கு நான் மெசேஜ் செய்தேன். ஆனால் அவர்கள் மறுத்து விட்டார்கள்” என்று கூறினார்.

Advertisement