இந்திய டெஸ்ட் அணிக்கு கோச்சாக வருவீங்களா? ரசிகரின் கேள்விக்கு ஒற்றை வார்த்தையில் பதிலளித்த – ஜேசன் கில்லெஸ்பி

Jason Gillespie
- Advertisement -

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜேசன் கில்லெஸ்பி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தொடர்ச்சியாக கிரிக்கெட் சார்ந்த பணிகளையே மேற்கொண்டு வந்தார். அந்த வகையில் பிரான்ச்சைசி தொடர்களின் போது பயிற்சியாளராக ஒரு சில அணிகளில் பயணித்து வந்த அவர் கடந்த 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இந்திய டெஸ்ட் அணிக்கு பயிற்சியாளராக வருவீர்களா? : ஜேசன் கில்லெஸ்பி பதில்

ஆனால் அவரது பதவிக்காலம் சில ஆண்டுகாலம் கூட நீடிக்காமல் வெறும் 8 மாதங்களிலேயே முடிவுக்கு வந்தது. அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் வாரியம் அவரை வெளியேற்றாமல் தானாக முன்வந்து அந்த பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜேசன் கில்லெஸ்பி வெளியேறினார். அதற்கு காரணம் யாதெனில் :

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் நிர்வாகம் தன்னை கேட்காமலேயே சீனியர் உதவியாளரை நீக்கியதால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே அந்த பதவியில் இருந்து வெளியேறினேன் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் பணியாற்றும் போது பல அவமதிப்புகளை சந்தித்ததாகவும் அதன் காரணமாகவும் தான் பதவியில் இருந்து விலகியதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஜேசன் கில்லெஸ்பி தனது சமூகவலைதள பக்கத்தின் மூலம் தன்னை பின் தொடர்பவர்களுடன் கலந்துரையாடிய போது பல்வேறு சுவாரஸ்யமான கேள்விக்கு பதிலளித்தார். அந்த வகையில் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இருந்து வெளியேறியதற்கு காரணம் : தன்னை கேட்காமல் பாகிஸ்தான் நிர்வாகம் எடுத்த பல்வேறு முடிவுகள் தான் தன்னை அதிருப்தி அடைய வைத்ததாகவும், பல அவமதிப்புகள் தான் சந்தித்ததாகவும் அதன் காரணமாகவே பதவி விலகியதாகவும் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

மேலும் ரசிகர் ஒருவர் தற்போது இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி வருவதால் நீங்கள் இந்திய டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக செயல்பட வேண்டும். இந்திய டெஸ்ட் அணிக்கு உங்களது பயிற்சி தேவைப்படுகிறது. அதற்கு உங்களது பதில் என்ன? என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். அந்த கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதிலளித்து கில்லெஸ்பி :

இதையும் படிங்க : இன்னும் 3 ரன்கள் போதும்.. நியூசிலாந்து அணிக்கெதிராக ரோஹித் சர்மா நிகழ்த்தப்போகும் – அசத்தல் சாதனை

“நோ தேங்க்ஸ்” என தனது பதிலை அளித்திருந்தார். கௌதம் கம்பீரின் தலைமையில் இந்திய அணி ஒருநாள் மட்டும் டி20 போட்டிகளில் அசத்தலாக செயல்பட்டு வந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியான தோல்வியை சந்தித்து வருவதால் கௌதம் கம்பீர் பதவி விலக வேண்டும் என்றும் அவருக்கு பதிலாக டெஸ்ட் அணிக்கு மட்டும் வேறு ஒரு பயிற்சியாளர் நியமிக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வரும் வேளையில் ரசிகர் இந்த கேள்வியை முன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement