தோனியை பிரதிபலித்த இளம் வீராங்கனை, மகளிர் கிரிக்கெட்டில் ப்ரம்மாண்ட உலகசாதனை படைத்த இந்தியா

IND vs SL Womens Cricket
- Advertisement -

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. அதில் முதலாவதாக கடந்த ஜூன் 23இல் துவங்கிய 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 2 – 1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது. அதை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் கடந்த ஜூலை 1-ஆம் தேதியன்று பல்லேக்கேல் நகரில் துவங்கியது. அதில் முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று அசத்தியது.

அந்த நிலைமையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2-வது போட்டி ஜூலை 4-ஆம் தேதியான நேற்று பல்லேக்கேல் நகரில் இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை மீண்டும் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டு நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 173 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

இந்தியா அதிரடி:
ஹாசினி பெரேரா, ஹர்ஷிதா சமரவிக்ரமா ஆகிய 2 வீராங்கனைகள் டக் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் கேப்டன் சமாரி அட்டப்பட்டு 27, அனுஷ்கா சஞ்சீவினி 25, நிலாக்சி டீ சில்வா 32, கவிசா திலாரி 5 என அந்த அணியின் முக்கிய வீராங்கனைகள் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி மேலும் பின்னடைவை கொடுத்தனர். இறுதியில் அந்த அணிக்கு அதிகபட்சமாக அமா காஞ்சனா 47* (83) ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் சுழலில் மாயாஜாலம் நிகழ்த்திய ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளையும் மேக்னா சிங் மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். அதை தொடர்ந்து 174 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ஷபாலி வர்மா – ஸ்மிரிதி மந்தனா ஆகிய நட்சத்திர வீராங்கனைகள் ஓப்பனிங்கில் களமிறங்கி ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர்.

பவர்பிளே ஓவர்களில் அதிரடியான பவுண்டரிகளை பறக்கவிட்டு வெற்றியை உறுதி செய்த இந்த ஜோடியில் இருவருமே அரைசதம் கடந்தும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அவுட்டாகாமல் இலங்கை பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு சிம்ம சொப்பனமாக ரன்களைக் குவித்தனர். இவர்களை அவுட் செய்வதற்காக இலங்கை போட்ட அத்தனை திட்டங்களையும் தவிடுபொடியாக்கிய இந்த ஜோடி கடைசி வரை அவுட்டாகாமல் 25.4 ஓவரில் 174/0 ரன்களைக் குவித்து இந்தியாவுக்கு 10 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.

- Advertisement -

இந்தியா உலகசாதனை:
இதில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் ஷபாலி வர்மா 71* (71) ரன்கள் எடுக்க அவரைவிட அட்டகாசமாக பேட்டிங் செய்த ஸ்மிருதி மந்தனா 11 பவுண்டரி 1 சிக்சருடன் 94* (83) ரன்கள் குவித்தார். இந்த வெற்றிக்கு பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளை எடுத்து துருப்பு சீட்டாக செயல்பட்ட ரேணுகா சிங் ஆட்டநாயகி விருதை வென்றார். இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரையும் 2 – 0* என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி அசத்தியுள்ளது.

இப்போட்டியில் 174 ரன்களை விக்கெட்டே இழக்காமல் வெற்றிகரமாக துரத்திய இந்தியா மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு விக்கெட் கூட இழக்காமல் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற ஆஸ்திரேலியாவின் 25 வருட உலக சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளது. அந்த பட்டியல் இதோ:
1. இந்தியா : 174 ரன்கள், இலங்கைக்கு எதிராக, 2022*
2. ஆஸ்திரேலியா : 164 ரன்கள், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 1997
3. ஆஸ்திரேலியா : 163 ரன்கள், நியூசிலாந்துக்கு எதிராக, 2010
4. நெதர்லாந்து : 147 ரன்கள், டென்மார்க்க்கு எதிராக, 1997
5. இந்தியா : 146 ரன்கள், இலங்கைக்கு எதிராக, 2006

- Advertisement -

தோனி மேஜிக்:
முன்னதாக இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 22.2 ஓவரில் 70/4 என தடுமாறிக் கொண்டிருந்தபோது தீப்தி சர்மா வீசிய பந்தை எதிர்கொண்ட இலங்கை வீராங்கனையை அனுஷ்கா சஞ்சீவினி ரன் அடிக்க முயன்று கிடைக்காத நிலையில் கிரீஸ் எனப்படும் வெள்ளைக்கோட்டை அசால்டாக பொறுமையாக தொட்டார். அதற்குள் பந்தை எடுத்த இந்திய விக்கெட் கீப்பர் வீராங்கனை யஸ்டிக்கா பாட்டியா கண்ணிமைக்கும் நேரத்தில் அசால்டாக பந்தை ஸ்டம்ப் மீது தூக்கி எறிந்தார்.

அதை அவுட்டென உணர்ந்த அவர் சந்தேகத்துடன் அம்யரிடம் அவுட் கேட்டார். அதை டிவி ரிப்ளையில் சோதித்த போது பேட்டிங் வீராங்கனை அசால்டாக நடந்து வருவதைப் போல் வந்ததால் அவரின் கால் மற்றும் பேட் என எதுவுமே வெள்ளை கோட்டை தொடவில்லை. அதேசமயம் கண்ணிமைக்கும் நேரத்தில் யஸ்டிக்கா பாட்டியா வீசிய பந்து ஸ்டெம்பை பதம் பார்த்தது. அதனால் ஒன்றுக்கு 2 முறை சோதித்த 3-வது அம்பயர் அவுட்டென அறிவித்தார்.

இதையும் படிங்க : IND vs ENG : இந்தியா அந்த இடத்துல தப்பு பண்ணிட்டாங்க, இனி வெற்றி கடினம் தான் – முன்னாள் வீரர் கருத்து

அதை பார்த்த வர்ணனையாளர்கள் ஆச்சரியத்தில் இந்திய வீராங்கனையை பாராட்டியதுடன் சுமாராக செயல்பட்ட இலங்கை வீராங்கனையை விமர்சித்தார். மேலும் இதைப்பார்த்த ரசிகர்களுக்கு முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி இதற்கு முன்பு ஒரு போட்டியில் இதைவிட திரும்பியே பார்க்காமல் பந்தை கையிலெடுத்து ஸ்டம்பை அடித்து அவுட் செய்த தருணம் நினைவுக்கு வந்தது. அப்படி தோனியை போலவே செயல்பட்ட இளம் இந்திய விக்கெட் கீப்பர் வீராங்கனையை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

Advertisement