520 ரன்ஸ் இங்கிலாந்தை நொறுக்கி.. கேன் வில்லியம்சனை முந்திய ஜெய்ஸ்வாலுக்கு.. ஐசிசி அறிவித்துள்ள கெளரவ பரிசு

Jaiswal ICC
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நிறைவு பெற்ற தொடரை 4 – 1 (5) என்ற கணக்கில் வென்ற இந்தியா 2025 சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியது. இந்த தொடரில் வெற்றி பெறுவதற்கு பேட்டிங் துறையில் வெறும் 22 வயதிலேயே இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்டு 712 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய யசஸ்வி ஜெய்ஸ்வால் தொடர் நாயகன் விருதை வென்றார்.

குறிப்பாக 2வது போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் 35 ரன்கள் கூட எடுக்காத போது தனி ஒருவனாக இங்கிலாந்தை புரட்டி எடுத்த அவர் 209 ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அதை விட 3வது போட்டியில் 12 சிக்ஸர்களை பறக்க விட்டு 214* ரன்கள் அடித்த அவர் இங்கிலாந்துக்கு எதிராக 2 இரட்டை சதங்களை விளாசிய முதல் இந்திய வீரராக சாதனை படைத்தார்.

- Advertisement -

ஐசிசி அளித்த கெளரவம்:
அதே போல கடைசி 2 போட்டிகளிலும் அரை சதங்கள் அடித்து வெற்றியில் பங்காற்றிய அவர் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில், போட்டியில், தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற 3 உலக சாதனையும் படைத்தார். அந்த வகையில் விராட் கோலி இல்லாத குறை தெரியாத அளவுக்கு இங்கிலாந்தை சொல்லி அடித்த அவர் இந்தியாவின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாகவும் தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் “2024 காலண்டர் வருடத்தில் பிப்ரவரி மாதத்தின் உலகின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்” என்ற விருதை யசஸ்வி ஜெய்ஸ்வால் வென்றுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. அதாவது கடந்த சில வருடமாகவே ஒவ்வொரு மாதமும் சர்வதேச கிரிக்கெட்டில் அசத்தும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஐசிசி ஸ்பெஷல் விருதை கொடுத்து வருகிறது. அந்த வரிசையில் இந்தியாவின் ஜெய்ஸ்வால், இங்கிலாந்தின் கேன் வில்லியம்சன், இலங்கையின் பதும் நிசாங்கா ஆகியோர் 2024 பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

- Advertisement -

அதில் பிப்ரவரி மாதம் 3 டெஸ்ட் போட்டிகளில் 20 சிக்ஸர்கள் உட்பட 560 ரன்களை 112 என்ற அபாரமான சராசரியில் குவித்த ஜெய்ஸ்வால் அந்த விருதை வென்றுள்ளாதாக ஐசிசி அறிவித்துள்ளது. அதைப் பெற்ற பின் ஐசிசி இணையத்தில் ஜெய்ஸ்வால் பேசியுள்ளது பின்வருமாறு. “இது என்னுடைய ஒரு சிறந்த செயல்பாடாகும். முதல் முறையாக இப்போது தான் நான் 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறேன்”

இதையும் படிங்க: சி.எஸ்.கே அணியின் அடுத்த கேப்டன் யார் என்பதை அவங்க 2 பேர் தான் முடிவு செய்வாங்க – காசி விஸ்வநாதன் தகவல்

“மகிழ்ச்சியுடன் நான் விளையாடிய இந்த தொடரில் நாங்கள் 4 – 1 என்ற கணக்கில் வென்றோம். ஐசிசி கொடுத்த இந்த விருதை வென்றதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். வருங்காலத்தில் இதே போல செயல்படுவேன் என்று நம்புகிறேன்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக ஜெய்ஸ்வால் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement