சி.எஸ்.கே அணியின் அடுத்த கேப்டன் யார் என்பதை அவங்க 2 பேர் தான் முடிவு செய்வாங்க – காசி விஸ்வநாதன் தகவல்

Kasi-CSK
- Advertisement -

சிஎஸ்கே அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி கடந்த சில ஆண்டுகளாகவே ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து எப்போது ஓய்வு பெறப்போகிறார் என்பதே பெரிய அளவில் பேசப்பட்டு வரும் விடயமாக இருந்து வருகிறது. ஏனெனில் பொதுவாகவே கிரிக்கெட் வீரர்கள் 35 வயதை கடந்து விட்டால் அணியில் இருந்து நிராகரிக்கப்பட்டு வரும் வேளையில் தோனி தொடர்ச்சியாக விளையாடி வருகிறார்.

இருப்பினும் தோனி நல்ல உடற்தகுதியுடன் இருப்பதனால் அவர் இன்னும் சில ஆண்டுகள் விளையாட வேண்டும் என்று ரசிகர்களாலும், முன்னாள் வீரர்களாலும் கேட்டுக் கொள்ளும் அளவிற்கு அவருடைய ஆட்டம் பிரமாதமாக இருக்கிறது.

- Advertisement -

இருப்பினும் தோனி தற்போது 42 வயது எட்டி விட்டதால் இந்த ஆண்டு தனது ஓய்வு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு தான் கிரிக்கெட்டில் ஆரம்பித்த காலத்தில் எவ்வாறு இருந்தாரோ அதேபோன்று நீளமான முடியையும் அவர் வைத்துள்ளதால் நிச்சயம் இந்த ஆண்டு ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

அப்படி தோனி ஒருவேளை ஓய்வு அறிவித்துவிட்டால் அடுத்ததாக சி.எஸ்.கே அணியின் கேப்டன் யார்? என்ற கேள்வியே பலரது மத்தியிலும் நிலவி வருகிறது. இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில் : அடுத்த கேப்டன் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

ஆனால் அணியின் உரிமையாளர் திரு சீனிவாசன் அவர்கள் எங்களிடம் : இது குறித்து யாரும் பேச வேண்டாம். அடுத்த கேப்டன் மற்றும் துணை கேப்டன் யார்? என்பதை தற்போதைய பயிற்சியாளரும், தோனியும் முடிவு செய்து என்னிடம் கூறுவார்கள். நான் எல்லோருக்கும் தெரிவிப்பேன். அதுவரை அனைவரும் அமைதியாக இருப்போம் என்று தெளிவாக கூறிவிட்டார்.

இதையும் படிங்க : 2024 டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியை கழற்றி விடும் தேர்வுக் குழு? காரணத்தை கேட்டு கொதிக்கும் ரசிகர்கள்

எனவே இந்த ஆண்டு நாங்கள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதில் மட்டும்தான் முழு கவனம் செலுத்தி வருகிறோம். அதுதான் எங்களின் முதல் நோக்கமாகவும் இருக்கிறது. தோனி எங்களிடம் முதலில் லீக் சுற்றில் கவனம் செலுத்தி விளையாடி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்று எப்போதுமே கூறுவார். அந்த வகையில் இந்த ஆண்டும் நாங்கள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும் எண்ணத்தை மட்டுமே தற்போதைக்கு வைத்துள்ளோம் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement