2024 டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியை கழற்றி விடும் தேர்வுக் குழு? காரணத்தை கேட்டு கொதிக்கும் ரசிகர்கள்

Virat Kohli 4
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நடைபெற உள்ளது. முதலில் இந்த தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாட மாட்டார்கள் என்று செய்திகள் வெளியானது. ஏனெனில் 2022 டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா, ராகுல், தினேஷ் கார்த்திக், போன்ற மூத்த வீரர்கள் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு காரணமானது.

அதனால் அவர்களை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய இளம் அணியை களமிறக்க பிசிசிஐ முடிவெடுத்ததாக செய்திகள் வந்தன. அதற்கேற்றார் போல் 2024 டி20 உலகக் கோப்பைக்கு பின் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் மேற்கொண்டு இந்தியாவுக்காக ஒரு 20 ஓவர் போட்டியில் கூட விளையாடாமல் இருந்தனர். இருப்பினும் 2023 உலகக் கோப்பையில் காயத்தை சந்தித்த பாண்டியா கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் விளையாடவில்லை.

- Advertisement -

கொதிக்கும் ரசிகர்கள்:
அதனால் அந்தத் தொடரில் மீண்டும் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட ரோஹித் தலைமையில் விராட் கோலி விளையாடினார். அதன் காரணமாக 2024 டி20 உலகக் கோப்பையில் அந்த இருவரும் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் 2023 உலகக் கோப்பையில் தொடர்ந்து 10 வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ரோஹித் சர்மா 2024 டி20 உலகக் கோப்பையிலும் இந்திய அணியை வழி நடத்துவார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியை கழற்றி விடுவதற்கு தேர்வுக் குழுவினர் பரிசீலித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பாக கடந்த உலகக் கோப்பையில் 765 ரன்கள் அடித்த விராட் கோலி அதிரடியாக விளையாடவில்லை என்று தேர்வுக்குழு கருதுகிறது. எனவே நங்கூரமாக நின்று விளையாடக்கூடிய விராட் கோலியின் அணுகுமுறை மெதுவான பிட்ச்களை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் பொருந்தாது என்று தேர்வுக்குழு கருதுவதாக டைம்ஸ் நவ் இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

மறுபுறம் ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங் போன்ற இளம் வீரர்கள் தங்களுடைய திறமையை நிரூபித்து இந்தியாவுக்காக விளையாட காத்திருக்கின்றனர். எனவே அவர்களுக்கு வழி விடுவதற்காக டி20 கிரிக்கெட்டில் சற்று மெதுவாக விளையாடக்கூடிய விராட் கோலியை அடுத்த உலகக் கோப்பை நீக்குவதற்கு தேர்வுக்குழு யோசிப்பதாக தெரிய வருகிறது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2024 : சூரியகுமார் யாதவ் விளையாடுவதில் சிக்கல்.. மும்பை அணிக்கு கிடைத்த சோகமான தகவல்

இது பற்றிய இறுதி முடிவை தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் 2024 ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் ஆட்டத்தை பார்த்து விட்டு எடுக்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதை பார்க்கும் ரசிகர்கள் 2022 டி20 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்று அனைத்து வகையான மைதானங்களில் அசத்தக்கூடிய தரமான விராட் கோலியை கழற்றி விட்டால் அது இந்தியாவுக்கு தான் பாதகம் என்று சமூக வலைதளங்களில் கொதித்து வருகிறார்கள்.

Advertisement