- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs WI : கைக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை தவறவிட்ட யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – என்ன நடந்தது?

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது தற்போது கயானா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழந்து 159 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் பிரண்டன் கிங் 42 ரன்களையும், ராவ்மன் பவல் 40 ரன்கள் குவித்தனர்.

பின்னர் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இஷான் கிஷனுக்கு பதிலாக அறிமுக வாய்ப்பினை பெற்ற யாஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை அவர் டி20 கிரிக்கெட்டில் தவற விட்டுள்ளார். இந்த போட்டியில் இரண்டு பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் மெக்காய் வீசிய பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

ஏற்கனவே இந்திய அணியில் இடம் பிடிக்க வீரர்களுக்கு இடையே பலமான போட்டி நிலவி வரும் வேளையில் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பையே அவர் தவறவிட்டதால் நிச்சயம் அடுத்த போட்டியில் அவர் வெளியேற்றப்பட்டு மீண்டும் இஷான் கிஷன் களமிறக்கப்படுவார் என்று தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : IND vs WI : கட்டுக்கடங்காமல் முக்கிய ரன்களை விளாசிய கேப்டன் போவல் – வலுவாக சிக்கிய இந்தியா, தொடாத இலக்கை துரத்துமா?

டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது திறமையை நிரூபித்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் டி20 கிரிக்கெட்டில் அந்த வாய்ப்பை தவற விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்திய அணியானது சூரியகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது.

- Advertisement -
Published by