பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 2 – 0 (2) என்ற கணக்கில் வங்கதேசம் வென்றது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக வெற்றி பெற்று வங்கதேசம் வரலாறு படைத்தது. அத்துடன் 3 வகையான கிரிக்கெட்டிலும் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக ஒரு தொடரை வென்று வங்கதேசம் சாதனை படைத்தது.
அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிற்கும் வங்கதேசம் அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடரில் இந்தியாவை வீழ்த்துவோம் என்று வங்கதேசம் அணியின் கேப்டன் நஜ்முல் சாண்டோ பாகிஸ்தானை தோற்கடித்ததும் பேட்டி கொடுத்திருந்தார். குறிப்பாக ஷாகிப் அல் ஹசன், முஸ்பிகர் ரஹீம், மெஹதி ஹசன் ஆகியோர் நல்ல அனுபவத்தை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
வங்கதேசம் வரட்டும்:
எனவே பாகிஸ்தானை தோற்கடித்ததால் கிடைத்துள்ள தன்னம்பிக்கையுடன் சிறப்பாக விளையாடினால் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்த முடியும் என்று நஜ்முல் சான்டோ சவால் விடுத்துள்ளார். இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிராக விளையாடுவது ஜாலியாக வேடிக்கையாக இருக்கும் என்று இந்திய வீரர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். மேலும் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் அங்கமாக நடைபெறும் அத்தொடர் ஃபைனலுக்கு செல்ல மிகவும் முக்கியம் என்று ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “வங்கதேசம் நன்றாக விளையாடுகின்றனர் என்று நினைக்கிறேன். அவர்களுக்கு எதிராக விளையாடுவது எங்களுக்கு வேடிக்கையாக இருக்கும். எதையும் பொருட்படுத்தாமல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது வேடிக்கையாக இருக்கும். அதற்காக நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்”
அடித்து நொறுக்குவாரா ஜெய்ஸ்வால்:
“அந்தத் தொடர் மிகவும் முக்கியம். ஏனெனில் அது டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ளது. எதைப் பற்றியும் நான் அதிகம் சிந்திக்கவில்லை. ஒரு வீரராக தொடர்ந்து தயாராகி நான் முன்னேற வேண்டும். இந்த வேலைகளை செய்தால் நான் முன்னேற்றம் அடைவேன். என்னுடைய ஃபார்மை தொடர்வதற்காக நான் கடினமாக உழைத்து வருகிறேன்”
இதையும் படிங்க: ஐபிஎல் 2025 : இந்திய அணிக்கு பின் ராஜஸ்தான் அணியில் முக்கிய பொறுப்பேற்க இதான் காரணம்.. டிராவிட் பேட்டி
“எனவே பயிற்சிகளை செய்து தொடர்ந்து தயாராகி வந்தால் எனக்கு சாதகமான முடிவுகளும் முன்னேற்றமடையும்” என்று கூறினார். முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் வலுவான இங்கிலாந்து அணியை சொந்த மண்ணில் அடித்து நொறுக்கிய ஜெயஸ்வால் 712 ரன்கள் விளாசி 4 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற உதவினார். எனவே வங்கதேசத்தையும் எதிர்கொண்டு அடிக்க ஆவலுடன் காத்திருப்பதாக ஜெய்ஸ்வால் மறைமுகமாக கூறுவது குறிப்பிடத்தக்கது.



