- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வேறு எந்த வீரரும் செய்யாத தனித்துவமான சாதனையை நிகழ்த்திய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – விவரம் இதோ

இந்திய அணியின் இளம் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கடந்த 2023-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 சதம் மற்றும் 12 அரைசதம் என கிட்டத்தட்ட 50 ரன்கள் சராசரியுடன் 2440 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். தனது கரியரின் ஆரம்பத்திலேயே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் டெஸ்ட் போட்டிகளுக்கான நிரந்தர துவக்க வீரராகவும் மாறியுள்ளார்.

யாஷஸ்வி ஜெய்ஸ்வால் நிகழ்த்திய தனித்துவமான சாதனை :

ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இன்று நவம்பர் 22-ஆம் தேதி கௌஹாத்தி நகரில் துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றதன் மூலம் இதுவரை எந்த ஒரு வீரரும் செய்யாத மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : கடந்த 2023 ஆம் ஆண்டு டோமினிக்கா நகரில் நடைபெற்ற போட்டியில் அறிமுகமான அவர் இதுவரை 28 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள வேளையில் இந்த 28 போட்டிகளுமே அவர் வெவ்வேறு நகரில் உள்ள மைதானங்களில் விளையாடி உள்ளார்.

டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை அவர் எந்த ஒரு மைதானத்திலும் இதுவரை விளையாடிய இடத்தில் மீண்டும் விளையாடாமல் முதல் 28 போட்டியிலும் வெவ்வேறு மைதானங்களில் விளையாடியுள்ளார். இப்படி ஒரு வீரர் தொடர்ந்து 28 போட்டிகளில் 28 வெவ்வேறு நகரங்களிலு உள்ள மைதானங்களில் விளையாடுவது இதுவே முதல் முறை.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் விளையாட ஆரம்பித்த அவர் அதன்பின்னர் சவுத் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து என பல்வேறு நாடுகளுக்கும் சென்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதையும் படிங்க : ஜஸ்ப்ரீத் பும்ராவால் நிச்சயம் இதை செய்ய முடியும்.. அதனால் தான் அவர் டாப் கிளாஸ் – சபா கரீம் கருத்து

தற்போது இந்திய மண்ணில் விளையாடி வரும் அவர் இதுவரை ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் இரண்டு முறை டெஸ்ட் போட்டியில் விளையாடியதே கிடையாது. அனைத்து போட்டிகளையும் வெவ்வேறு மைதானங்களில் விளையாடி விசித்திரமான மற்றும் தனித்துவமான சாதனையை யாஷஸ்வி ஜெய்ஸ்வால் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -