ஜஸ்ப்ரீத் பும்ராவால் நிச்சயம் இதை செய்ய முடியும்.. அதனால் தான் அவர் டாப் கிளாஸ் – சபா கரீம் கருத்து

Saba Karim and Bumrah
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி ஏற்கனவே கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது.

ஜஸ்ப்ரீத் பும்ராவை பாராட்டிய : சபா கரீம்

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று கௌகாத்தி நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை இந்திய அணியானது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்யும் என்பதனால் இந்த போட்டியானது இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டியில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவால் எந்த சூழ்நிலையிலும் விக்கெட்டை எடுக்க முடியும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சபா கரீம் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசி அவர் கூறுகையில் :

போட்டியின் எந்த சூழலிலும் பந்துவீச்சின் போது ஜஸ்ப்ரீத் பும்ரா முழு கண்ட்ரோலையும் தன்னிடம் வைத்திருக்கிறார். எதிரணியின் பேட்ஸ்மேன்கள் யாராக இருந்தாலும் அவருக்கு எதிராக சரியான திட்டங்களை வகுத்து பந்து வீசுகிறார். அதன் காரணமாகவே அவரால் எந்த சூழ்நிலையிலும் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடிகிறது.

- Advertisement -

அதனாலே அவர் உலகின் டாப் கிளாஸ் பவுலராக இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை நீண்ட ஸ்பெல்லை வீசுவதை விட சரியான நேரத்தில் பார்ட்னர்ஷிப்பை முறியடிப்பது முக்கியம். அந்த வகையில் தேவையான போது இந்திய கேப்டன்கள் அவரை கொண்டு வந்து எதிரணியின் வீரர்களை வீழ்த்துகிறார்கள் என சபா கரீம் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 28.2 ஓவரில் 205 ரன்ஸ்.. பஸ்பாலை பொளந்த ஹெட்.. 104 வருடத்துக்கு பின் 2 நாளில் ஆஸி சாதனை வெற்றி

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் இரண்டாவது இன்னிங்சில் 1 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். அதேபோன்று தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சிலும் 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement