- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தன்னை வளர்த்து விட்ட இடத்தை மறக்காத ஜெய்ஸ்வால்.. பாராட்டுகளை பெற்றுவரும் அவரது செயல் – என்ன நடந்தது?

இந்திய அணியின் இளம் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கடந்த 2023-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், ஒரு ஒருநாள் போட்டி மற்றும் 23 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் அணியை பொறுத்தவரை முதன்மை துவக்க வீரராக நிலையான இடம் பிடித்து விளையாடி வரும் அவர் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் விரைவில் நிரந்தர இடத்தினை பிடித்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு திறமை வாய்ந்த வீரராகவே அவர் இருந்து வருகிறார்.

வளர்ந்து வந்த பாதையை மறக்காத யாஷஸ்வி ஜெய்ஸ்வால் :

தனது இளம் வயதில் மும்பைக்கு இடம்பெயர்ந்த அவர் அங்கு நடைபெற்ற ஹாரிஸ் ஷீல்டு என்கிற 16 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இடையேயான போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதன் வாயிலாக ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான பின்னர் தற்போது சர்வதேச போட்டிகளில் இந்திய அணியின் துவக்க வீரராக வரும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் தான் வளர்ந்து வந்த பாதையை மறக்கக்கூடாது என்பதற்காக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் செய்த ஒரு செயல் தற்போது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. மும்பையில் நடைபெற்று வரும் இந்த ஹாரிஸ் ஷீல்டு தொடரின் மூலமாகவே சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், வினோத் காம்பிளி, திலீப் வெங்சர்க்கார், சர்பராஸ் கான், ப்ரித்வி ஷா போன்ற வீரர்கள் இந்திய அணிக்குள் அடியெடுத்து வைத்தனர்.

அந்த அளவிற்கு இளம் வீரர்களின் திறனை வெளிப்படுத்துவதில் அந்த தொடர் முக்கியமான தொடராக இருந்து வருகிறது. அந்த தொடரின் வாயிலாகவே இந்திய அணிக்கு வந்த யாஷஸ்வி ஜெயஸ்வால் தற்போது மும்பையில் நடைபெற்று வரும் ஹாரிஸ் ஷீல்டு மற்றும் கில்ஸ் ஷீல்டு ஆகிய இரண்டு தொடர்களுக்குமான சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான விருதை வழங்க தான் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதற்காக ஸ்பான்சர் செய்ய உள்ளதாகவும் மும்பை பள்ளி விளையாட்டு சங்கம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

அவரது இந்த செயல் வளர்ந்து வரும் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், ஆதரிக்கும் வகையிலும் மாறியுள்ளதால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த செய்தி குறிப்பாக மும்பை பள்ளி விளையாட்டு சங்கம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது :

இதையும் படிங்க : ஆஸி அணிக்கெதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை அறிவித்த – பார்த்திவ் பட்டேல்

யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த தொடரின் இறுதி போட்டிகளுக்கான சிறந்த பேட்ஸ்மேன் விருதை வழங்க முன்வந்துள்ளார். தனது ஆரம்ப காலத்தில் உதவிய இந்த தொடர்களை மறக்காமல் அதற்கு மரியாதையையும், நன்றிக்கடன் செலுத்தும் விதமாக அவர் செய்யவுள்ள இந்த செயல் பாராட்டத்தக்க ஒன்று என மும்பை பள்ளி விளையாட்டு சங்கம் குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -