இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது நாளை அக்டோபர் 29-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இதற்காக தற்போது இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணியானது இந்த டி20 தொடரில் வெற்றிபெற முனைப்பு காட்டும் என்பதனால் இந்த தொடர் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வுசெய்து அறிவித்த : பார்த்திவ் பட்டேல்
இந்நிலையில் இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் இந்திய வீரரான பார்த்திவ் பட்டேல் கணித்து தனது விருப்பத்தின் அடிப்படையில் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள அந்த பட்டியலில் : அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் துவக்க வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மிடில் ஆர்டருக்கான பேட்ஸ்மேன்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் திலக் வர்மாவும், நான்காவது இடத்தில் கேப்டன் சூர்யகுமார் யாதவும், ஐந்தாவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனையும் அவர் தேர்வு செய்துள்ளார். ஆறாவது இடத்தில் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அக்சர் பட்டேலை தேர்வு செய்துள்ளார்.
ஏழாவது இடத்தில் நிதீஷ் ரெட்டி அல்லது ஷிவம் துபே ஆகிய இருவரில் ஒருவரை தேர்வு செய்து கொள்ளலாம் என்ற ஆப்ஷனை கொடுத்துள்ளார். மேலும் முழுநேர பந்துவீச்சாளர்களாக எட்டாவது இடத்தில் குல்தீப் யாதவையும், ஒன்பதாவது இடத்தில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை தேர்வு செய்துள்ளார்.
எஞ்சியுள்ள இரண்டு இடங்களுக்கு வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த அணி நிச்சயம் போட்டியில் வெல்லக்கூடிய அணியாக தான் தெரிகிறது. அந்த வகையில் பார்த்திவ் பட்டேல் வெளியிட்டுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : 6, 6, 6.. வினோதமாக ஹிட் விக்கெட்டான வங்கதேச வீரர்.. 3 பந்தில் வெற்றியை பறித்த வெஸ்ட் இண்டீஸ்
1) அபிஷேக் சர்மா, 2) சுப்மன் கில், 3) திலக் வர்மா, 4) சூரியகுமார் யாதவ், 5) சஞ்சு சாம்சன், 6) நிதீஷ் ரெட்டி / ஷிவம் துபே, 7) அக்சர் பட்டேல், 8) குல்தீப் யாதவ், 9) வருண் சக்கரவர்த்தி, 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) அர்ஷ்தீப் சிங்.



