வங்கதேசத்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் விளையாடியது. அத்தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் வங்கதேசம் சொந்த மண்ணில் கோப்பையை வென்று அசத்தியது. அடுத்ததாக அவ்விரு அணிகள் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றன.
அத்தொடரின் முதல் போட்டி அக்டோபர் 27ஆம் தேதி சட்டோகிராம் மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி 20 ஓவரில் 165/3 ரன்கள் எடுத்து அசத்தியது. அதிகபட்சமாக அலிக் அதனாஸ் 34 (27), ப்ரண்டன் கிங் 33 (36), கேப்டன் ஷாய் ஹோப் 46* (28) ரன்கள் எடுத்தனர்.
வினோத ஹிட் விக்கெட்:
அவர்களுடன் கடைசி நேரத்தில் களமிறங்கிய ரோவ்மன் போவல் 1 பவுண்டரி 3 சிக்ஸருடன் 44* (28) ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். குறிப்பாக தன்சிம் ஹசன் வீசிய கடைசி ஓவரின் 2, 3, 4வது பந்துகளில் அவர் 6, 6, 6 என ஹாட்ரிக் சிக்சர்களை பறக்க விட்டார். வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
அடுத்ததாக விளையாடிய வங்கதேசத்தை சிறப்பாக பந்து வீசிய வெஸ்ட் இண்டீஸ் 19.4 ஓவரில் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது. அதிகபட்சமாக தன்சிம் ஹசன் 32, நசும் அஹ்மத் 20, தௌஹீத் ஹ்ரிடாய் 28 ரன்கள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக கடைசி விக்கெட்டுக்கு தஸ்கின் அகமது 10 (8) ரன்கள் எடுத்து வெற்றிக்கு போராடினார்.
3 சிக்ஸரால் மாறிய வெற்றி:
அப்போது ஃசெபார்ட் வீசிய கடைசி ஓவரின் 4வது பந்தில் தஸ்கின் அஹ்மத் இறங்கி சென்று சிக்சர் அடிக்க முயற்சித்தார். அந்த முயற்சியில் வெள்ளைக் கோட்டுக்குள் நன்றாக இறங்கிச் சென்ற அவர் முழு மூச்சைக் கொடுத்து பந்தை அதிரடியான சிக்ஸராக பறக்க விட்டார். ஆனால் அதற்காக ஒரேடியாக உள்ளே இறங்கி சென்ற அவருடைய கால் ஸ்டம்ப் மேலே மோதியது.
இதையும் படிங்க: நான் வெற்றிகரமான கோச் ஆகலனாலும் பரவால்ல.. இந்தியா இதுக்காக பயப்படக் கூடாது.. கம்பீர் மெசேஜ்
அதனால் வினோதமாக அவர் ஹிட் விக்கெட் முறையில் பரிதாபமாக அவுட்டானார். மொத்தத்தில் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக கடைசி ஓவரில் ரோவ்மன் போவெல் அடித்த 3 சிக்ஸர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தை தோற்கடிக்க முக்கிய பங்காற்றியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக அகில் ஹொசைன் 2, ஜேசன் ஹோல்டர் 3, ஜெய்டேன் சீல்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.



