- Advertisement -
ஐ.பி.எல்

நல்ல இடத்துல போட்டும் அடிச்சிட்டாங்க.. குஜராத் அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – யாஷஸ்வி ஜெய்ஸ்வால் பேட்டி

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 52-ஆவது லீக் போட்டியானது நேற்று ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

குஜராத் அணிக்கெதிரான தோல்வி குறித்து : யாஷஸ்வி ஜெய்ஸ்வால் பேட்டி

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களை குவித்தது. பின்னர் 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணியானது குஜராத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்கள் மட்டுமே குவித்தது.

- Advertisement -

இதன் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணியானது 77 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறியதாவது : நாங்கள் இந்த போட்டியில் நல்ல ஏரியாவில் பந்து வீசியும் குஜராத் அணியின் வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடிவிட்டனர்.

இந்த போட்டியின் போது ஆரம்ப கட்டத்தில் பவுண்டரியையும், பெரிய ஷாட்களையும் தடுக்க நினைத்தோம் ஆனால் எங்களால் அது முடியாமல் போனது. ஜோப்ரா ஆர்ச்சர் இன்று அவருடைய சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தவில்லை. எந்த ஒரு பந்துவீச்சாளருக்கும் இது போன்ற ஒரு மோசமான நாள் வரும். ஆனால் இந்த தொடர் முழுவதும் அவர் எங்களுக்காக சிறப்பாகவே செயல்பட்டுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஒருவழியா ராஜஸ்தான் கேப்டனான யாஷஸ்வி ஜெய்ஸ்வால்.. ரியான் பராக்கிற்கு – என்ன ஆச்சு?

நிச்சயம் அவர் வலுவாக திரும்பி வருவார் என்று நினைக்கிறேன். இந்த போட்டியில் அடைந்த தோல்வியில் இருந்து நிறைய பாடங்களை கற்றுள்ளோம். நிச்சயம் அடுத்த போட்டியில் வெற்றியுடன் திரும்புவோம் என்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -