ஒருவழியா ராஜஸ்தான் கேப்டனான யாஷஸ்வி ஜெய்ஸ்வால்.. ரியான் பராக்கிற்கு – என்ன ஆச்சு?

Yashasvi Jaiswal
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான 52-வது லீக் போட்டியானது மே 9-ஆம் தேதியான இன்று ஜெய்ப்பூர் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதி வருகின்றன.

ராஜஸ்தான் அணியின் கேப்டனான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் :

அதன்படி நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து தற்போது குஜராத் அணி விளையாடி வருகிறது. இன்றைய போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான ரியான் பராக் டாஸ் போட வராமல் அவருக்கு பதிலாக இளம் துவக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் டாஸ் போட வந்தார்.

- Advertisement -

இதன் காரணமாக அவரே இந்த போட்டியில் கேப்டனாக விளையாடுகிறார் என்பது உறுதியாகியுள்ளது. அதோடு டாசுக்கு பிறகு பேசிய ஜெய்ஸ்வால் இன்றைய போட்டியில் கேப்டன் ரியான் பராக் ஏன் விளையாடவில்லை? என்பது குறித்தும் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த போட்டியில் நாங்கள் முதலில் பந்துவீச விரும்புகிறோம்.

ஏனெனில் இந்த ஆடுகளம் சேஸிங்கின் போது மிகச் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதன் காரணமாகவே நாங்கள் முதலில் பந்துவீச விரும்புகிறோம். இந்த போட்டியில் ரியான் பராக் தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக விளையாடவில்லை. கடந்த போட்டியின் போது அவர் தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டார். அதன் காரணமாகவே இன்றைய போட்டியில் விளையாடவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறப்போகும் 4 அணிகள் இவைதான் – ரவிச்சந்திரன் அஷ்வின் கணிப்பு

நிச்சயம் விரைவில் அவர் அணிக்கு திரும்புவார். அதேபோன்று இன்றைய போட்டியில் ஷிம்ரன் ஹெட்மயர் மற்றும் யாஷ் ராஜ் புஞ்சா ஆகியோர் அணிக்குள் வருகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்காகவே காத்திருக்கிறோம் என யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement