- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் குறித்து – யாஷஸ்வி ஜெய்ஸ்வால் பேச்சு

இந்திய அணியின் நட்சத்திர இளம் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணிக்காக கடந்த 2023 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 24 டெஸ்ட் போட்டிகள், 1 ஒருநாள் போட்டி மற்றும் 23 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுதவிர்த்து கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் அவர் 67 போட்டிகளில் விளையாடியுள்ளார். எதிர்கால நட்சத்திர வீரராக பார்க்கப்படும் ஜெய்ஸ்வால் தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே நிரந்தர இடத்தை பிடித்து விளையாடி வருகிறார்.

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியிடம் இருந்து கற்று கொண்டவை இவைதான் : யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

இருந்தாலும் இனிவரும் காலத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்று கூறப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் இடம் கிடைக்காத அவர் அடுத்த தொடரை எதிர்நோக்கி காத்திருக்கும் வேளையில் தற்போது இந்திய அணியின் ஜாம்பவான்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருடன் களத்தில் இருந்த அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் கூறியதாவது : எப்போதுமே நான் ரோகித் சர்மாவுடன் களத்தில் விளையாடும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அவர் எனக்கு பேட்டிங்கில் உள்ள பல்வேறு நுட்பங்களை கற்றுக் கொடுத்து என்னுடைய வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தார். உடல் ரீதியாகவும் சரி, மனரீதியாகவும் சரி எவ்வாறு வலிமையான வீரராக செயல்பட வேண்டும் என்பது குறித்து பல்வேறு விடயங்களை என்னுடன் பகிர்ந்துள்ளார்.

அவருடன் நான் விளையாடிய போது நிறைய விடயங்களை கற்றுக் கொண்டேன் என ஜெய்ஸ்வால் கூறினார். மேலும் தொடர்ந்து விராட் கோலி குறித்து பேசிய அவர் கூறியதாவது : விராட் கோலி உண்மையிலேயே ஒரு மிகச் சிறப்பான மனிதர். அவரிடம் இருக்கும் உறுதி மற்றும் நிலைப்பாடு என்னுடைய ஆட்டத்தையும் முன்னேற்ற உதவியது.

- Advertisement -

நான் அவருடன் பலமுறை களத்தில் இணைந்து விளையாடி உள்ளேன். அவருடன் இணைந்து விளையாடும் போது நம்மால் சிரிப்பை அடக்க முடியாது. ஏனெனில் அந்த அளவுக்கு நகைச்சுவையாக பேசக்கூடியவர். ஒவ்வொருவரை பற்றியும் தெளிவாக தெரிந்து வைத்திருக்கும் அவர் மைதானத்திற்கு உள்ளேவும் சரி, வெளியேவும் சரி மிகச் சிறப்பான ஒரு வீரர். அவருடன் இருந்தால் நாம் சிரிப்பது உறுதி என்று பேசியுள்ளார்.

இதையும் படிங்க : அது அவரோட விருப்பம் அவரு பண்ணாரு.. சூரியகுமார் யாதவுக்கு ஆதரவாக நின்ற சவுரவ் கங்குலி – விவரம் இதோ

சர்வதேச போட்டிகளில் ரோகித் சர்மாவுடன் இணைந்து 28 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் 1869 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளார். அதேபோன்று விராட் கோலியுடன் 10 இன்னிங்ஸ்களில் இணைந்து விளையாடியுள்ள அவர் 361 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -