
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது நவம்பர் 14-ஆம் தேதியான இன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. அண்மையில் இந்திய அணியின் ஜாம்பவான்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வேளையில் தற்போது இளம் வீரர்களை கொண்ட இந்திய டெஸ்ட் அணியானது மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதால் இந்த தொடரிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கே.எல் ராகுல் அவரது இடத்தில் களமிறங்கி விளையாடி வருகிறார். அதேபோன்று விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சுப்மன் கில் அவரது இடத்தில் களமிறங்கி விளையாடி வருகிறார். இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்களாக பார்க்கப்படும் அவர்கள் இருவருமே இளம் தலைமுறையினருக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகின்றனர். அதோடு பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது இடத்தை நிரப்புவது மிக கடினம் என்றும் அவர்கள் இந்திய அணிக்காக அளித்த பங்களிப்பு என்பது ஒப்பிட முடியாத ஒன்று என்று தனது கருத்தினை இந்திய அணியின் இளம் துவக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். மேலும் அவரது பலம் என்ன என்பதை அறிந்து விளையாடுவேன் என்றும் உறுதி அளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்களது கரியரில் இந்திய அணிக்காக செய்தது நம்ப முடியாத விடயங்களை தான். ஏனெனில் இத்தனை ஆண்டு காலம் அவர்கள் அளித்த பங்களிப்பு என்பது ஒப்பிட முடியாத ஒன்று. அதோடு அவர்களது கரியர் வளர்ந்து வரும் எங்களைப் போன்ற ஒட்டுமொத்த இளம் வீரர்களுக்கும் ஒரு முன் உதாரணத்தை கொடுத்துள்ளது.
பல கோடி ரசிகர்கள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள இளம் வீரர்களையும் அவர்கள் இன்ஸ்பயர் செய்துள்ளனர். அதனால் அவர்கள் இருவரது இடத்தை என்னால் நிச்சயம் பூர்த்தி செய்ய முடியாது. ஆனாலும் நான் என்னுடைய பலத்தை அறிந்து இந்திய அணிக்காக மிக நம்பிக்கையுடன் விளையாடி வெற்றிகளை பெற்றுத் தருவேன் என்று நம்புகிறேன்.
இதையும் படிங்க : இதுதான் தல தோனிக்கு கடைசி சீசனா? சி.எஸ்.கே அணி வெளியிட்ட பதிவால் ரசிகர்கள் குழப்பம் – விவரம் இதோ
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் வளர்ந்து வரும் வீரர்களுக்கு மட்டுமின்றி எனக்கும் ஒரு முன்மாதிரி தான். அவர்களுடன் இணைந்து விளையாட கிடைத்த வாய்ப்புகளில் பல்வேறு விடயங்களை நான் கற்றுக் கொண்டுள்ளேன். அவர்களும் நான் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று பல்வேறு அறிவுறுகளை தனிப்பட்ட வகையில் எனக்கு வழங்கியுள்ளனர் என யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறியது குறிப்பிடத்தக்கது.