இறுதிப்போட்டியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் வெளியேறியதால் ஜெய்ஸ்வாலுக்கு அடித்த அதிர்ஷ்டம் – விவரம் இதோ

Ruturaj-and-Jaiswal
- Advertisement -

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கெதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

IND vs AUS

- Advertisement -

இந்நிலையில் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் கூடுதல் ஸ்டான்ட் பை துவக்க வீரராக இடம்பெற்றிருந்த ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இருந்து வெளியேறியுள்ளார். இந்தியாவில் நடைபெற்று வரும் அவர் சி.எஸ்.கே அணிக்காக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் இந்திய அணியில் இருந்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் வருத்தம் அளித்துள்ளது.

இப்படி ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியில் இருந்து வெளியேற காரணம் யாதெனில் : ஐ.பி.எல் தொடர் முடிந்த கையேடு ஜூன் மாதம் 3-4 ஆகிய தேதிகளில் ருதுராஜ் கெய்க்வாட் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். அதன்காரணமாக அவர் தற்காலிக விடுப்பு கேட்டு பி.சி.சி.ஐ யிடம் முறையிட்டதால் அவருக்கு பி.சி.சி.ஐ யும் விடுப்பு வழங்கியுளது.

Yashasvi-Jaiswal

இப்படி ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியில் இருந்து வெளியேறியதால் அவருக்கு மாற்றாக எந்த வீரர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது. இந்நிலையில் கெய்க்வாட்டிற்கு மாற்று வீரராக நடப்பு ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மாற்று ஸ்டான்ட் பை வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். விசா கிடைத்தது அவர் இங்கிலாந்து பயணிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : CSK vs GT : மழை வந்தா என்ன? 9.35 மணி வரைக்கும் பிரச்சனை இல்ல – ஆனா அதுக்கு மேலயும் லேட் ஆனா என்ன ஆகும்?

நடப்பு 16 ஆவது ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணிக்காக 14 போட்டிகளில் விளையாடிய அவர் 48 ரன்கள் சராசரியுடன் 625 ரன்களை குவித்திருந்தார். இதில் 1 சதம் மற்றும் 5 அரைசதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement