இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக ரசிகர்களை மகிழ்வித்து விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை 4 – 1 என்ற கணத்தில் இந்தியா வென்றது. அதனால் அதிரடியாக விளையாடி 12 வருடம் கழித்து உங்களை தோற்கடிப்போம் என்று சொன்ன இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறி 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.
இந்தியாவின் இந்த வெற்றியில் 22 வயதாகும் இளம் வீரர் ஜெய்ஸ்வால் 712 ரன்கள் அடித்து இங்கிலாந்துக்கு தனி ஒருவனாக சிம்ம சொப்பனமாக செயல்ட்டு முக்கிய பங்காற்றினார் என்றே சொல்லலாம். குறிப்பாக 1 – 0 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த போது இரண்டாவது போட்டியில் தனி ஒருவனாக 209 ரன்கள் அடித்த அவர் 3வது போட்டியில் 214* ரன்கள் குவித்து இங்கிலாந்துக்கு எதிராக 2 இரட்டை சதங்கள் அடித்த முதல் இந்திய வீரராக சாதனை படைத்தார்.
ஜெய்ஸ்வால் பதிலடி:
அதை விட 3வது போட்டியில் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக ஹாட்ரிக் சிக்ஸர்களை தெறிக்க விட்ட அவர் மொத்தம் 12 சிக்ஸர்களை விளாசினார். அதன் வாயிலாக ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையும் அவர் படைத்தார். ஆனால் தங்களுடைய பஸ்பால் அணுகுமுறையை பார்த்து தான் ஜெய்ஸ்வால் அப்படி அதிரடியாக விளையாடுவதால் அதற்கான பாராட்டுக்கள் இங்கிலாந்து அணியையும் சேரும் என்று அப்போட்டியின் போது பென் டக்கெட் மனசாட்சின்றி கூறினார்.
அந்த கருத்துக்காக நாசர் ஹுசைன், மைக்கேல் கிளார்க், கிறிஸ் கெய்ல் போன்ற நிறைய முன்னாள் வீரர்கள்ஏற்கனவே அவருக்கு பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் பென் டக்கெட் சொன்னது போல இங்கிலாந்து அணியை பார்த்து தான் நீங்கள் அதிரடியாக விளையாடுகிறார்கள்? என்று ஜெய்ஸ்வாலிடம் நேரடியாகவே செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அதைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்ற வகையில் ஜெய்ஸ்வால் பதிலளித்தது பின்வருமாறு. “அதைப்பற்றி நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. என்னால் முடிந்த அனைத்தையும் களத்தில் மட்டும் செய்ய முயற்சிப்பதே நான் செய்யும் சிறந்தவற்றை பேசக் கூடியதாகும். தொடரை வென்றது மகத்தான உணர்வைக் கொடுக்கிறது. அதற்காக மகிழ்ச்சியடையும் நான் என்னுடைய ஆட்டத்தில் அதிகமாக கவனம் செலுத்துகிறேன்”
இதையும் படிங்க: முதல் 4-5 போட்டிகளுக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகும் 3 சூப்பர் ஸ்டார்கள் – விவரம் இதோ
“அப்போது தான் என்னுடைய அணிக்காக என்னால் சிறந்து விளங்க முடியும். அதை தவிர்த்து இன்று நான் எதையும் அதிகமாக சிந்திக்கவில்லை. எப்போதும் ஒரு போட்டியை மட்டுமே நான் பார்த்து விளையாடுகிறேன். நாளை என்ன நடக்கும் என்பது தெரியாது. அதனால் அதைப் பற்றி நான் அதிகமாக சிந்திக்க விரும்பவில்லை” என்று கூறினார். இதைத்தொடர்ந்து ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக ஜெய்ஸ்வால் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.



