முதல் 4-5 போட்டிகளுக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகும் 3 சூப்பர் ஸ்டார்கள் – விவரம் இதோ

MI
- Advertisement -

2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது சீசனானது மார்ச் 22-ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. ஆண்டுதோறும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பினை பெறும் ஐபிஎல் தொடர் இவ்முறையும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த விவாதங்கள் இப்போதே எழ ஆரம்பித்துவிட்டன. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்காக ஹார்டிக் பாண்டியா தலைமையில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியானது தற்போது தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது.

- Advertisement -

இவ்வேளையில் அந்த அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆரம்பகட்ட போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் சூரியகுமார் யாதவ் ஏற்கனவே ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா பாதிப்பால் அறுவை சிகிச்சையை மேற்கொண்டு கொண்டு ஓய்வில் இருப்பதால் முதல் இரண்டு போட்டியில் விளையாட மாட்டார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது தொடர்ச்சியாக இந்திய அணிக்காக ஓய்வின்றி போட்டிகளில் விளையாடி வரும் ரோகித் சர்மாவும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதல் 4-5 போட்டிகளில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் போது அவர் முதுகு வலியாலும் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாகவே ஐபிஎல் தொடரின் முதல் 4-5 போட்டிகளில் அவர் ஓய்வெடுத்துக் கொள்வார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதேபோன்று மற்றொரு முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவும் டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு பணிச்சுமை காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் 4-5 போட்டிகளில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ரிட்டையர்மென்ட் பற்றி தெரியாது.. ஆனா டீசல் என்ஜின் மாதிரியான தோனி அதை செய்ய பிரகாச வாய்ப்பிருக்கு.. ஏபிடி பேட்டி

ஏற்கனவே ஹார்டிக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்ட வேளையில் பும்ரா மற்றும் சூரியகுமார் யாதவ் அதிருப்தியை தெரிவித்திருந்த வேளையில் தற்போது ரோகித் சர்மாவுடன் சேர்ந்து இவர்கள் இருவரும் ஆரம்பகட்ட போட்டிகளை தவறவிட இருப்பது நிச்சயம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்படுத்தும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement