அன்போடு திட்டும் ரோஹித் பாய் மாதிரி யாராவது இதை செய்வாங்களா? கோலி பற்றியும் ஜெய்ஸ்வால் பேட்டி

Yashasvi Jaiswal
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 25 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் தோற்றது. அடுத்து நடைப்பெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. அதனால் டெஸ்ட் தொடரில் படுதோல்வியைப் பரிசளித்த தென்னாப்பிரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா அடுத்ததாக நடைபெறும் டி20 தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது.

ஒருநாள் தொடரில் இந்தியா பதிலடி கொடுத்து வெற்றி பெறுவதற்கு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி முக்கிய பங்காற்றினார்கள். கடந்த 15 வருடங்களுக்கு மேலாக விளையாடி வரும் அவர்கள் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளனர். தற்போது டெஸ்ட், டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்ட அவர்கள் 2027 உலகக் கோப்பை வரை ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி வெற்றியுடன் விடை பெற திட்டமிட்டுள்ளனர்.

- Advertisement -

திட்டிலும் அன்பு:

அதற்கு முன் அவர்களைக் கழற்றி விட கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு முயற்சித்து வருகிறது. இருப்பினும் அதற்காக அசராத அவர்கள் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்களில் தொடர்நாயகன் விருது வென்று பதிலடி கொடுத்து வருகின்றனர். முன்னதாக தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் 3வது போட்டியில் ஜெய்ஸ்வால் ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தை அடித்து அசத்தினார்.

அப்போட்டியில் சதமடிக்க ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி தமக்கு உதவியதாக ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். மேலும் ரோஹித் சர்மா களத்தில் கோபப்பட்டு திட்டினால் கூட அதில் அன்பு இருக்குமென்று ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒவ்வொரு முறையும் ரோஹித் பாய் எங்களைத் திட்டும் போது அதற்குள் ஏராளமான அன்பு, இன்பங்கள் கலந்திருக்கும்”

- Advertisement -

ஜெய்ஸ்வால் நெகிழ்ச்சி:

“சொல்லப்போனால் ரோஹித் பாய் உங்களைத் திட்டாவிட்டால், என்ன நடந்தது? என்ற ஒரு சங்கடமான உணர்வு உங்களுக்கு ஏற்படும். அவர் நம்முடைய செயலைப் பற்றி ஏதும் மோசமாக உணர்ந்தாரா? என்று நீங்கள் நினைக்கத் தோன்றும். ரோஹித் மற்றும் விராட் பாய் அணியில் இருந்தால் நாங்கள் அனைவரும் ரிலாக்ஸாக இருப்பதாக உணர்வோம்”

இதையும் படிங்க: அடிச்ச அடியில் மொத்தமாக தேடிய பாகிஸ்தான்.. பாபரை ஓவர்டெக் செய்து மாஸ் காட்டிய அபிஷேக சர்மா

“3வது ஒருநாள் போட்டியில் நான் விளையாடிக் கொண்டிருந்த போது, ரிலாக்ஸாக அமைதியாக டைம் எடுத்து விளையாடு என்று ரோஹித் பாய் என்னிடம் சொன்னார். எனக்காக அவர் மறுபுறம் ரிஸ்க் எடுக்கத் தயாராக இருந்தார். எத்தனை பேர் அப்படி மற்றவருக்காக செய்வார்கள்? அதே போல விராட் பாஜி எனக்கு சிறுசிறு இலக்குகளைக் கொடுத்தார். நாமே போட்டியை நின்று முடிக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்” எனக் கூறினார்.

Advertisement