இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் விளையாடி 3 – 1 (5) என்ற கணக்கில் போராடி தோல்வியை சந்தித்தது. அத்தொடரில் முதல் போட்டியிலேயே சதத்தை அடித்த ஜெய்ஸ்வால் இந்தியா வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினர். அத்தொடர் முழுவதுமே இந்தியாவுக்காக போராடிய அவர் 2வது அதிக ரன்கள் (391) குவித்து அசத்தினார்.
முன்னதாக அத்தொடரில் அடிலெய்ட் போட்டியை முடித்துக்கொண்டு இந்திய அணி அடுத்த போட்டியில் விளையாடுவதற்காக பிரிஸ்பேன் நகருக்கு பயணித்தது. அப்போது அனைத்து வீரர்களும் குறித்த நேரத்தில் பேருந்துக்கு வந்தனர். ஆனால் ஜெய்ஸ்வால் மிகவும் தாமதமாக வந்ததால் கேப்டன் ரோஹித் சர்மா கோபமடைந்தார்.
தாமதமாக வந்த ஜெய்ஸ்வால்:
அதனால் அவருடைய பொருட்களை மேனேஜருக்கு பதிலாக அவரையே தூக்குமாறு ரோஹித் சர்மா தண்டனை கொடுத்தார். அத்துடன் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணியினர் ஜெய்ஸ்வாலை மட்டும் ஏற்றாமல் அங்கேயே விட்டுவிட்டு பேருந்தில் புறப்பட்டு சென்றனர். அந்த 2 தண்டனைகளை சந்தித்த ஜெய்ஸ்வால் இறுதியில் தனி காரில் பிரிஸ்பேன் நகருக்கு சென்று இந்திய அணியுடன் இணைந்து கொண்டார்.
இந்நிலையில் அன்றைய நாளில் குறித்த நேரத்திற்குள் வராததால் தவறு தம் மேலே இருந்ததாக ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். அதனாலேயே ரோஹித் சர்மா இந்திய வீரர்களிடம் தம்மை மன்னிப்பு கேட்க வைத்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அன்றைய நாளில் நாங்கள் புறப்படும் நேரம் தான் பேருந்துக்கு வரும் நேரம் என்று நான் நினைத்தேன்”
ரோஹித் வழங்கிய 2 தண்டனை:
“எனவே அங்கே கொஞ்சம் குழப்பம் நேர்ந்தது. அதற்காக ரோஹித் பாய் திட்டியது மோசமல்ல. அவரிடம் சார் இது பொதுவான தவறு, அதற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்று சொன்னேன். அதை ஏற்றுக்கொண்ட ரோஹித் பரவாயில்லை, இனிமேல் விழிப்புணர்வுடன் இரு என்று சொன்னார். அந்த தருணங்களிலும் ரோஹித் பாய் வேடிக்கையாகவே நடந்து கொண்டார். அவருடைய செயல்கள் பொழுதுபோக்காக நல்ல வழியில் இருக்கும்”
இதையும் படிங்க: அவங்களை ஊக்கமாக வைத்து.. இந்தியாவை சொந்த மண்ணில் ரெடியாகி வருவோம்.. தெ.ஆ கேப்டன் பவுமா
“தாமதமாக வந்ததற்காக அவர் என்னை அனைவரிடமும் மன்னிப்பு கேட்கச் சொன்னார். இறுதியில் பேருந்து என்னை விட்டுவிட்டு சென்றது. அதைப் பார்த்து நான் பரவாயில்லை, நான் இதற்கு தகுதியானவன், இந்த தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன் என்ற வகையில் இருந்தேன். நான் குறித்த நேரத்தில் இருந்திருக்க வேண்டும். எப்படி அதை விட்டேன் என்று தெரியவில்லை. அன்றைய நாளில் நேரத்தை தவற விட்டிருக்கக் கூடாது” என்று கூறினார்.



