அவங்களை ஊக்கமாக வைத்து.. இந்தியாவை சொந்த மண்ணில் ரெடியாகி வருவோம்.. தெ.ஆ கேப்டன் பவுமா

Temba Bavuma 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அதைத் தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியா 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. வரும் நவம்பர் மாதம் நடைபெறும் அத்தொடர் 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறுகிறது.

2012க்குப்பின் சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் வெற்றி நடை போட்டு வந்தது. இருப்பினும் கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக சுழலுக்கு சாதகமான மைதானங்களில் மண்ணைக் கவ்விய இந்தியா 3 – 0 (3) என்ற கணக்கில் தோற்றது. அதனால் வரலாற்றில் முதல் முறையாக நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியைச் சந்தித்தது.

- Advertisement -

நியூஸிலாந்தின் ஊக்கம்:

அதனால் விராட், ரோஹித் போன்ற சீனியர்களை கழற்றி விட்ட இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் புதிய பயணத்தை துவங்கியுள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து அணி இந்தியாவில் வெற்றி சிறப்பானது என்று தென்னாபிரிக்கா கேப்டன் தெம்பா பவுமா தெரிவித்துள்ளார். அத்தொடரில் நியூஸிலாந்து வெளிப்படுத்திய ஆட்டத்தை ஊக்கமாக எடுத்துக்கொண்டு இம்முறை இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா தோற்கடிக்க முயற்சிக்கும் என்று பவுமா கூறியுள்ளார்.

இது பற்றி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பவுமா பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வது எளிது கிடையாது. கடைசியாக அங்கே நியூசிலாந்து விளையாடிய விதம் நிறைய வழிகளில் ஊக்கத்தைக் கொடுக்கிறது. இந்தியாவுக்கு வந்த பெரும்பாலான அணிகள் வெற்றிகரமாக செயல்படவில்லை. இந்தியாவில் ஆடுகளங்களைப் பொறுத்த வரை சூழலுக்கு சாதகமாக இருக்கலாம்”

- Advertisement -

பவுமா நம்பிக்கை:

“ஒருவேளை இந்தியாவில் இம்முறையும் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்கள் இருந்தால் நாங்கள் ஆச்சரியப்பட மாட்டோம். நாங்கள் அதில் விளையாடுவோம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இருப்பதால் இப்போதெல்லாம் அந்தந்த நாடுகள் தங்களது சொந்த மண்ணில் தங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை பயன்படுத்துகின்றன”

இதையும் படிங்க: 100 சதம் அடிக்கா விட்டாலும் சச்சினை விட விராட் கோலி சிறந்தவர்.. காரணம் இதான்.. ஹார்மிசன் பேட்டி

“அந்தக் கோணத்தில் பார்த்தால் இந்தியாவில் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்கள் இருப்பதில் ஆச்சரியமில்லை” என்று கூறினார். மொத்தத்தில் கில் தலைமையிலான இளம் இந்திய அணிக்கு தென்னாப்பிரிக்கா சவாலைக் கொடுக்கும் என்று சொல்லலாம். அந்த சவாலை சமாளித்து இந்திய அணி சொந்த மண்ணில் மற்றுமொரு புதிய வெற்றி நடையைத் துவக்குகிறதா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement