- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரோஹித் சர்மாவின் மாபெரும் சாதனையை முறியடிக்க ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு – விவரம் இதோ

இந்திய அணியின் நட்சத்திர இளம் துவக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கடந்த 2023-ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 26 போட்டிகளில் விளையாடி 49 இன்னிங்ஸ்களில் 7 சதம் மற்றும் 12 அரைசதம் என 51 ரன்கள் சராசரியுடன் 2428 ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை நிலையான இடத்தினை பிடித்துள்ள யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் துவக்க வீரராக இடம் பிடித்துள்ளார்.

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடிக்க ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு :

இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மாவின் மாபெரும் சாதனையை ஒன்றினை டெஸ்ட் போட்டிகளில் முறியடிக்க யாஷஸ்வி ஜெய்ஸ்வால் காத்திருக்கிறார்.

- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை நவம்பர் 14-ஆம் தேதி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்க இருக்கிறது. அந்த வகையில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் :

இதுவரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி சார்பாக அதிவேகமாக 50 சிக்சர்களை அடித்த இந்திய வீரராக ரோஹித் சர்மா முதலிடத்தில் இருக்கிறார். ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 88 சிக்ஸர்களை அடித்திருந்தாலும் முதல் 50 சிக்ஸர்களை 51 இன்னிங்ஸ்களில் அடித்திருந்தார்.

- Advertisement -

அவருக்கு அடுத்து தற்போது யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 49 இன்னிங்ஸ்களில் 43 சிக்ஸர்களை அடித்துள்ளார். இந்நிலையில் மேலும் 7 சிக்ஸர்களை அவர் விளையாடப்போகும் அடுத்த இன்னிங்சில் அடித்தால் ரோகித் சர்மாவின் சாதனையை மிஞ்சுவார். ஒருவேளை அவர் இந்த 7 சிக்ஸர்களை அடிக்க இரண்டு இன்னிங்ஸ்களை எடுத்துக் கொண்டால் ரோகித் சர்மாவிற்கு அடுத்து டெஸ்ட் போட்டிகளில் 50 சிக்ஸர்களை அதிவேகமாக அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.

இதையும் படிங்க : என் கேள்விக்கு பதில் சொன்னா.. சூரியகுமாருக்கு ஹோம்ஒர்க் பண்ணி ஹெல்ப் பண்ண தயார்.. ஏபிடி பதில்

டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை அதிரடியான துவக்கத்தை அளித்து வரும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் விரைவில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் நிரந்தர இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதே பலரது எதிரப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -