இந்திய ஒருநாள் அணியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அடிக்கவுள்ள ஜாக்பாட் – அப்போ ஆப்பு யாருக்கு?

Jaiswal
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி துவக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஐ.பி.எல் தொடரில் தனது சிறப்பான செயல்பாட்டின் மூலம் கவனத்தை ஈர்த்து கடந்த 2023-ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமானார். பின்னர் இதுவரை 23 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதம் என 723 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.

யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அடிக்கவுள்ள ஜாக்பாட் :

அதனைத்தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்த அவர் 19 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் நான்கு சதம் மற்றும் 10 அரைசதம் என 1798 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் அவருக்கு மூன்று வகையான கிரிக்கெட்டிலும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்கிற பல்வேறு பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

- Advertisement -

இந்திய டி20 மற்றும் டெஸ்ட் அணிகளில் துவக்க வீரராக விளையாடி வரும் அவருக்கு தற்போது ஒருநாள் போட்டிகளிலும் அறிமுகமாகும் ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏனெனில் தற்போது பார்ம் இன்றி தவித்து வரும் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் துவக்க வீரர்களாக விளையாடி வரும் வேளையில் அவர்கள் இருவரில் ஒருவருக்கு பதிலாக மாற்றுவீரராக அவர் இங்கிலாந்து தொடருக்கான ஒருநாள் அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது 23 வயதினை எட்டியுள்ள அவர் தொடர்ச்சியாக ரன்களை குவித்து வருவதால் நிச்சயம் ஒரு நாள் போட்டிகளுக்கான அணியிலும் அவருக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய முடிவுகளை இந்திய அணியின் நிர்வாகம் எடுக்க இருக்கிறது.

- Advertisement -

அந்தவகையில் இந்திய அணியின் நிர்வாகம் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவில் நடைமுறை இருக்கும் ஒருநாள் தொடர்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து தொடரில் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அவர் அந்த தொடரில் அசத்தினால் நிச்சயம் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : சுயநலமற்ற கெளதம் கம்பீரை இப்படியா பேசுவீங்க.. கோப்பையே பேசும்.. திவாரிக்கு ராணா பதிலடி

பொதுவாகவே இந்திய அணியின் துவக்க வீரர்களாக இடது கை, வலது கை பேட்ஸ்மேன்களை களமிறக்குவது வழக்கம். அந்த வகையில் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்டத்தில் ரோகித் சர்மா அல்லது சுப்மன் கில் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு அவர் இடம் பெறுவார் என்று தெரிகிறது.

Advertisement