இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். அவருடைய தலைமையில் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 27 வருடங்கள் கழித்து இந்தியா தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்த இந்தியா தற்போது ஆஸ்திரேலியாவிடமும் தோற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது.
அதன் காரணமாக தற்போது இந்திய அணி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அப்படி விமர்சனங்கள் எழும் போது ரோகித் சர்மாவை முன்னே வைத்து கௌதம் கம்பீர் பின்னே சென்றுள்ளதாக மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார். மேலும் கொல்கத்தா ஐபிஎல் கோப்பைகளை வென்றதற்கான பாராட்டுகளை முழுமையாக கம்பீர் பெற்றுக் கொண்டதாகவும் அவர் விமர்சித்தார்.
கம்பீர் மீது விமர்சனம்:
அந்த வகையில் நயவஞ்சகரான கௌதம் கம்பீர் தலைமையில் அபிஷேக் நாயர் உள்ளிட்ட துணைப் பயிற்சியாளர்களும் சுதந்திரமாக செயல்பட முடியாமல் இருப்பதாக திவாரி விமர்சித்துள்ளார். அந்த சூழ்நிலையில் சொந்த விருப்பு வெறுப்புக்காக சுயநலமற்ற கம்பீர் போன்றவரை விமர்சிப்பது சரியானது அல்ல என்று அவருக்கு இந்திய மற்றும் கொல்கத்தா வீரர் ஹர்ஷித் ராணா பதிலடி கொடுத்துள்ளார்.
இது பற்றி இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஒருவரை சொந்த பாதுகாப்பின்மைக்காக விமர்சிப்பது நல்லதல்ல. கௌதம் பாய் எப்போதும் தம்மை விட மற்றவர்களை பற்றி சிந்திக்க கூடியவர். வீரர்கள் தடுமாறும் போது ஆதரவளிக்கக் கூடிய அவர் அசத்தும் போது வெளிச்சத்திற்கு அனுப்பக்கூடியவர். அதை அவர் பலமுறை காண்பித்துள்ளார்”
சுயநலமற்ற கம்பீர்:
“போட்டிகளை உங்களுக்கு சாதகமாக எப்படி மாற்ற வேண்டும் என்பது பற்றிய நிறைய அறிவும் அவரிடம் உள்ளது. கௌதம் பையா நான் பார்த்ததிலேயே மிகவும் சுயநலமற்ற வீரர்களில் ஒருவர். மற்றவர்களை காட்டிலும் அவர் பொறுப்பை தன்னுடைய தோள் மீது எடுத்துக் கொள்பவர். எப்போதும் நல்ல செயல்பாடு என்பதற்கு விளம்பரம் தேவையில்லை. கோப்பைகளே அதனுடைய மதிப்பை பேசும்” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 8 இன்னிங்ஸ்.. கங்குலியே சொல்லிருக்காரு.. உ.கோ மறந்துட்டு கல்லை எரியாதீங்க.. ரோஹித், கோலிக்கு சித்து ஆதரவு
அந்த வகையில் அடுத்தடுத்த தோல்விகளால் கௌதம் கம்பீர் விமர்சனங்களை சந்தித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் கௌதம் கம்பீர் வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



