இந்தியாவில் நடைபெற்று வரும் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நெருங்கி வருகிறது. தேசிய அணியில் விளையாடாத வீரர்கள் அனைவரும் இந்த உள்ளூர் தொடரில் கட்டாயம் பங்கேற்று விளையாட வேண்டும் என்று பிசிசிஐ ஏற்கனவே வீரர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தது. அதனால் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் பலரும் இந்த தொடரில் விளையாடி வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெய்ஸ்வால் :
அவ்வகையில் இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரராக விளையாடி வரும் இளம் நட்சத்திர இடது கை ஆட்டக்காரராக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த கையோடு தற்போது மும்பை அணி சார்பில் சையத் முஷ்டாக் அலி தொடரில் விளையாட வருகிறார்.
அப்படி விளையாடி வரும் அவர் மும்பை அணிக்கு மிகச் சிறப்பான பங்களிப்பையும் வழங்கி வருகிறார். அந்த வகையில் கடைசியாக ராஜஸ்தான் மற்றும் மும்பை ஆகிய அணிகள் மோதிய சையத் முஷ்டாக் அலி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 216 ரன்களை அடித்து அசத்தியது.
அதன் பின்னர் 217 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற பிரமாண்ட இலக்கு மும்பை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த இலக்கினை வெகு சிறப்பாக துரத்திய மும்பை அணி 18.1 ஓவர்களில் 217 ரன்களை குவித்து அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது.
இந்த போட்டியின் போது 16 பந்துகளை சந்தித்து 15 ரன்கள் அடித்திருந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்து வெளியேறிய பிறகு கடுமையான வயிற்று பிடிப்பு மற்றும் வலியால் அவதிப்பட்டார். இதன் காரணமாக மருத்துவமனைக்கு அவசர அவசரமாக அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் பரிசோதிக்கையில் அவருக்கு தீவிரமான இரைப்பை குடல் அழற்சி இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
இதையும் படிங்க : ஜடேஜாவை கொடுத்துட்டு சிஎஸ்கே சாம்சனை வாங்க இதான் காரணம்.. 6 வருட திட்டம் பற்றி பிளமிங் பேட்டி
இதன் காரணமாக அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக அடுத்து அறுவை சிகிச்சை ஏதேனும் ஜெய்ஸ்வால் செய்து கொண்டால் அவர் இந்திய அணிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



