இந்த பையன்கிட்ட ஜாம்பவானா வருவதற்கு தேவையான எல்லா குணமும் இருக்கு.. ஜஹீர் கான் பாராட்டு

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் 4 போட்டிகளின் முடிவில் 3 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்ற இந்திய அணி ஆரம்பத்திலேயே இங்கிலாந்தை தோற்கடித்து கோப்பையை வென்றது. அதைத் தொடர்ந்து இத்தொடரின் கடைசி போட்டி மார்ச் 7ஆம் தேதி தரம்சாலா நகரில் துவங்கியது.

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மீண்டும் சுமாராக விளையாடி 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 79 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5, அஸ்வின் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு இளம் வீரர் ஜெய்ஸ்வால் மீண்டும் அபாரமாக விளையாடி 5 பவுண்டரி 3 சிக்சருடன் 57 (58) ரன்கள் விளாசினார்.

- Advertisement -

ஜஹீர் கான் பாராட்டு:
அந்த 57 ரன்களையும் சேர்த்து தனது கேரியரில் மொத்தம் 1028* ரன்கள் எடுத்துள்ள ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் வேகமாக 1000 ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். மேலும் சுனில் கவாஸ்கருக்கு பின் ஒரு டெஸ்ட் தொடரில் 700 ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்ற அவர் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்தார்.

இது போல நிறைய சாதனைகளை படைத்து வரும் அவர் ஐபிஎல் முதல் சர்வதேசம் வரை இதுவரை களமிறங்கிய பெரும்பாலான போட்டிகளில் மிகச்சிறப்பாக செயல்பட்டு தன்னை வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக அடையாளப்படுத்தி வருகிறார். இந்நிலையில் வருங்காலங்களில் ஜாம்பவானாக உருவெடுப்பதற்கான அனைத்து குணங்களும் ஜெய்ஸ்வாலுக்கு இருப்பதாக முன்னாள் வீரர் ஜஹீர் கான் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி கலர்ஸ் சினிபிளக்ஸ் சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “யசஸ்வி ஜெய்ஸ்வால் துவங்கும் போது சற்று கவனத்துடன் இருந்தார். ஆனால் ஆட்டத்தை துவங்கிய பின் ஸ்பின்னர்களுக்கு அவர் எதிராக அதிரடியாக விளையாடினார். நீங்கள் நல்ல ஃபார்மில் இருக்கும் போது அவசரமான ஷாட்டை அடித்து உங்களுடைய விக்கெட்டை கொடுக்கக் கூடாது என்ற மனநிலையுடன் இருக்க வேண்டும்”

இதையும் படிங்க: பேட்ஸ்மேனா மட்டுமில்ல பீல்டராகவும் உலகசாதனை நிகழ்த்திய ரோஹித் சர்மா – அப்படி என்ன சாதனை தெரியுமா?

“அதை ஜெய்ஸ்வால் காண்பித்தார். அவருடைய பேட்டிங்கில் ரன்கள் எடுப்பதற்கான பசியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இது போன்ற பெரிய கடினமான தொடர்கள் பேட்ஸ்மேன்களுக்கு எளிதாக வராது. இருப்பினும் அது போன்ற தொடரை தன்னுடைய நல்ல ஃபார்மை வைத்து ஜெய்ஸ்வால் பெரியளவில் பயன்படுத்தியுள்ளார். வீரர்களை விளையாட்டின் ஜாம்பவான்களாக மாற்றும் அனைத்து குணங்களையும் ஜெய்ஸ்வால் கொண்டுள்ளார்” என்று கூறினார்.

Advertisement